அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஆக 13, 2018
Advertisement

தார்ச்சாலையை பராமரிக்கணும்: கரூர் அருகே கட்டளை பகுதிகளில் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக தினமும், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், கட்டளையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, இருசக்கர வாகனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் கரூர் நகருக்கு வேலைக்குச் செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலையில் தடுமாறி விழுந்து, விபத்துக்குள்ளாகின்றனர். இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மின்கம்பங்களை மாற்ற வேண்டும்: கரூர் அருகே, மேலமாயனூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றுக்கு மின் இணைப்பு கொடுக்க, அப்பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. கம்பத்தில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், கம்பம் பலவீனமடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. எந்நேரம் வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்ற நிலையில் உள்ளன.

குப்பை மேடான பாசன வாய்க்கால்: மாயனூர் தடுப்பணையில் இருந்து கட்டளை பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இதை தவிர, அப்பகுதியில், வாய்க்கால் மேல்பகுதியில் இரண்டு பாலங்கள் உள்ளன. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், வாய்க்கால் பகுதியில் குவிந்துள்ள குப்பை, பல நாட்களாக அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பையை அள்ளி சுகாதாரம் பேண வேண்டும்.

கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தணும்: கரூர் அருகே, வீரராக்கியத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், பல ஆண்டுகளுக்கு முன், பொதுக் குடிநீர் குழாய் போடப்பட்டது. குழாயில் இருந்து வரும் தண்ணீர் வடிந்து செல்ல வழியில்லாமல் குழாய் அருகிலேயே கழிவுநீராக தேங்கி நிற்கிறது. இதனால், குழாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். குழாயில் இருந்து வெளியேறி, கழிவுநீராக தேங்கி நிற்கும் தண்ணீர் வடிந்து செல்ல, வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா? மாயனூர் தொடக்கப்பள்ளி அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைத்து, அதிலிருந்து தண்ணீர் பிடித்து வினியோகிக்க வசதியாக, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி தற்போது சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அதை பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யாமல் காலம் கடத்தி வருகிறது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். போர்வெல் குழாயை சீரமைத்து, சின்டெக்ஸ் தொட்டியை மாற்றி வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X