மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசனத் திட்டம், தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவிகித மானியம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவிகித மானியத்தில், நுண்ணீர் பாசனம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், இத்திட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம், 2,386 ஹெக்டேருக்கு, 9.61 கோடி ரூபாய், தோட்டக்கலைத் துறை மூலம், 2,160 ஹெக்டேருக்கு, 13.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், வாழை சொட்டுநீர் பாசனத்திற்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 81 ஆயிரத்து, 135 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 63 ஆயிரத்து, 25 ரூபாய், கரும்பு பயிருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு, 97 ஆயிரத்து, 134 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 75 ஆயிரத்து, 452 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், காய்கறி பயிருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு, 1.13 லட்சம் ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 87 ஆயிரத்து, 880 ரூபாய், தென்னை பயிருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு, 27 ஆயிரத்து, 770 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 21 ஆயிரத்து, 572 ரூபாய் வழங்கப்படுகிறது. தெளிப்பு நீர் பாசனத்திற்கு மழைத் தூவான் கருவிக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு, 30 ஆயிரத்து, 498 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 23 ஆயிரத்து, 690 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆதார் அட்டை, அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்றுடன் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர், கூட்டுறவு சர்க்கரை ஆலை (கரும்பிற்கு மட்டும்) அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X