புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நிழற்கூடம் இல்லாததால் அவதி: பள்ளிபாளையம் அடுத்த, கொக்கராயன்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நான்கு சாலைகள் சந்திப்பதால், வாகன போக்குவரத்து அதிகம். இங்கு நிழற்கூடம் இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டதால், போக்குவரத்து, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

- எஸ்.பொங்கியண்ணன், கொக்கராயன்பேட்டை.

பாலம் நுழைவுப்பகுதியில் பள்ளம்: குமாரபாளையம், பழைய காவிரி பாலம் நுழைவுப்பகுதியில், கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என, இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாலம் மிகவும் சேதமடைந்து பலவீனமாக உள்ளதால், தற்போது கூட பராமரிப்பு பணி நடக்கிறது. ஆனால், கார்கள் செல்லும் வகையில், பாலம் நுழைவுப்பகுதியில், இரும்பு தடுப்பு கீழ் பகுதியில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் பலரும் விழுந்து காயமடைய நேரிடுகிறது.

- சி.சந்தானஐயப்பன், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X