வாழைப்பழம் விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழைப்பழம் விலை சரிவு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: வாழைப்பழம் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்தது. ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே வாழைப்பழம் விலை உயர்ந்து வருகிறது. ஆடிப்பெருக்கு முடிந்தவுடன் விலையும் குறையத் தொடங்கியது. பூவன் பழம், நான்கு ரூபாய், ரஸ்தாளி ஏழு ரூபாய், செவ்வாழை, 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மிகவும் குறைந்து விட்டது. இதுகுறித்து, தள்ளுவண்டி வியாபாரி கூறியதாவது: கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்துள்ளது பூவன், ஒரு சீப், (14 பழம்) 15 ரூபாய், ரஸ்தாளி ஒரு பழம், ஐந்து ரூபாய், செவ்வாழை, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழங்களின் அளவைப் பொறுத்து, விலையில் இரண்டு ரூபாய் வரை மாற்றம் வரலாம். விலை குறைப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X