கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: என்.கொசவம்பட்டி, கவரா நகர், மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக துவங்கியது.
நாமக்கல் அடுத்த, என்.கொசவம்பட்டி கவரா நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து, காவிரி தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பகல், 2:00 மணிக்கு புண்யாசனம் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு பிடாரி அம்மன் கோவிலில் பொங்கல் படைத்து பூஜை, இரவு, 8:00 மணிக்கு கம்பம் நட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. வரும், 19 மாலை, 6:30 மணிக்கு சக்தி அழைத்தல், அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி எதிர்சேவை சக்தி ஏற்றுக்கொள்ளுதல் நடக்கிறது. மறுநாள் அதிகாலை, 1:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் ஊர்வலம், 4:00 மணிக்கு அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பூ மிதித்தல், அங்கப்பிரதட்சணம் ஆகியவை நடக்கிறது. வரும், 21 காலை, 8:30 மணிக்கு அம்மன் திருத்தேர் பவனி, 10:30 மணிக்கு கிடா வெட்டுதல், மாலை, 6:00 மணிக்கு கிராம பூஜையுடன் கம்பம் எடுத்து கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 22 இரவு, 7:30 மணிக்கு அம்மன் ஊஞ்சலில் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X