காவேரியில் சுரங்கப்பாதை: மண் பரிசோதனை தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவேரியில் சுரங்கப்பாதை: மண் பரிசோதனை தீவிரம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: காவேரி ரயில்வே பாலம் அருகே, சுரங்கப்பாதை அமைப்பதற்காக மண் பரிசோதனை பணி நடக்கிறது. பள்ளிபாளையம் அடுத்த, காவேரி வழித்தடத்தில் ரயில்வே பாலம் உள்ளது. இதன் வழியாக, மொளசி, கரட்டாங்காடு, புதுப்பாளையம், ஆயக்காட்டூர், தாஜ்நகர், ஓடப்பள்ளி, வசந்தநகர், பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, கார், டூவீலர் என, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஓடப்பள்ளி என்ற இடத்தில், தடுப்பணை கட்டப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தண்ணீர் தேக்கி வைக்கும்போது, ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ஆண்டுதோறும், எட்டு மாதங்கள், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படும். அப்போது, பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாவர். இப்பிரச்னையை தீர்க்க, காவேரியில் சுரங்கப் பாதை அமைக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு, ரயில்வே துறையும் அனுமதி வழங்கியது. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், அமைச்சர் தங்கமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முதல் கட்ட பணியாக, நிலம் சர்வே செய்யப்பட்டு, தற்போது, 10 மீட்டர் வரை மண் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து, கட்டுமான பணிகள் துவங்கும் என, தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X