அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தேங்கும் தண்ணீர்; சுகாதார சீர்கேடு: சீராப்பள்ளி டவுன் பஞ்., ஒடுவன்குறிச்சியில், பிரதான சாலையில், துணை சுகாதார நிலையம் அருகில், குடிநீருக்காக கேட் வால்வு பொருத்தப்பட்டுள்ளது. கேட் வால்வை, இரண்டடி பள்ளத்தில் அமைத்துள்ளனர். கொஞ்சம் மழை பெய்தாலும், இந்த குழியில் தண்ணீர் நிரம்பிவிடுகிறது. பிறகு தண்ணீர் குறைய நீண்ட நாட்களாகிறது. கொசு உற்பத்தியுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கேட் வால்வை இயக்க சிமென்ட் தொட்டி அமைத்து, தண்ணீர் உள்ளே செல்லாதவாறு மூட வேண்டும்.
வளைவு பகுதியில் வேகத்தடை இல்லை: பள்ளிபாளையம் அடுத்த, மோளகவுண்டம்பாளையத்தில் சாலையின் ஓரிடத்தில் கொண்டை ஊசி போன்று வளைவு உள்ளது. இங்கு, வேகத்தடை இல்லாததால், வாகனத்தில் வருவோர் மிகவும் அவதிப்படுகின்றனர். சிறிது தடுமாறினாலும், கீழே விழ வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் பலரும் பாதிக்கப்படுகின்றனர். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர். இங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் பலகை, போதுமான மின்விளக்கு அமைக்க வேண்டும்.

சிதிலமான தொட்டி சரி செய்யப்படுமா? திருச்செங்கோடு தாலுகா, குருசாமிபாளையம் அடுத்த, கல்லுபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தற்போது, அதில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, சிலாப்கற்கள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. எந்நேரத்திலும் இடிந்துவிழும் அபாயம் உள்ளதால், குடியிருப்புகளில் வசிப்போர் அச்சத்துடன் உள்ளனர். தண்ணீர் பிடிக்க செல்லும்போதெல்லாம், அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.

பொதுக்கழிவறை சீரமைக்கணும்! கொல்லிமலையில், முக்கிய சந்திப்பாக உள்ள இடம் சோளக்காடு. இப்பகுதியில் இருந்துதான், வாசலூர் பட்டி ஏரி, தோட்டக்கலைத்துறையின் பூங்கா, அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். இங்கு, காய்கறி, பழங்களை விற்க மார்க்கெட் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி சுற்றுலா வாகனங்களும் உள்ளன. இங்குள்ள கழிவறை சுத்தம் இல்லாமல் இருப்பதுடன், தண்ணீரும் அடிக்கடி வருவதில்லை. சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டியது அவசியம்.

குப்பை எரிப்பால் மக்கள் அவஸ்தை: நாமக்கல் அடுத்த அண்ணாநகரில் இருந்து, சேந்தமங்கலம் சாலை, வேட்டாம்பாடிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள மயானம் அருகே, பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அதற்கு, விஷமிகள் சிலர் தீ வைப்பதால், பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அங்கு குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும் அல்லது குப்பையை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X