காவிரியில் வெள்ளப்பெருக்கு: மாவட்ட கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரியில் வெள்ளப்பெருக்கு: மாவட்ட கலெக்டர் ஆய்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், காவிரி ஆற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
குமாரபாளையம், காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை, கலெக்டர் ஆசியாமரியம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, நான்கு நாட்களாக எச்சரித்து வருகிறோம். இந்திரா நகர், கலைமகள் வீதி, மணிமேகலை தெரு ஆகிய பகுதிகளில், 286 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு தெரிவிக்கப்படுகிறது. அதற்கேற்றார்போல் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். ஆர்.டி.ஓ., பாஸ்கரன், தாசில்தார் ரகுநாதன், ஆணையாளர் மகேஸ்வரி உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X