போதமலையில் 2வது நாளாக கோமாரி நோய் தடுப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போதமலையில் 2வது நாளாக கோமாரி நோய் தடுப்பு முகாம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: போதமலையில், இரண்டாவது நாளாக கோமாரி நோய் சிறப்பு முகாம் நடந்தது. வெண்ணந்தூர், போதமலையில் கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் இறந்தன. நூற்றுக்கணக்கான கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கால்நடைத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்தனர். நான்கு பேர் கொண்ட, இரு மருத்துவக்குழுவினர் நேற்று முன்தினம் காலை, போதமலைக்கு சென்றனர். இரண்டு நாட்களாக, அங்கேயே தங்கியிருந்து, 150க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர். இதுகுறித்து, மருத்துவக்குழுவினர் கூறியதாவது: ஆடு, மாடுகளுக்கு வைரஸ் பிரச்னையால் வாயில் புண் ஏற்பட்டுள்ளது. கோமாரி நோய் போல் தெரிந்தாலும், கோமாரி நோய் இல்லை. இருப்பினும் அனைத்து கால்நடைகளையும் பரிசோதித்து மருந்து வழங்கியுள்ளோம். அடுத்த மாதம், கோமாரி நோய்க்கு சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இதில், அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X