'அண்ணா பல்கலை., ஊழலை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அண்ணா பல்கலை., ஊழலை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்'

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தர்மபுரி: ''அண்ணா பல்கலை மறுமதிப்பீடு ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என, எம்.பி., அன்புமணி கூறினார்.


தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு இறகுப்பந்து சங்க மாநில தலைவரும், எம்.பி.,யுமான அன்புமணி, கோப்பை, பதக்கம் வழங்கி பாராட்டினார்.

அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய விளையாட்டு வீரர்கள், உலகளவில் சாதனை படைத்து வருவதால், விளையாட்டுத்துறையில், தமிழகஅரசு அதிகளவு முதலீடு செய்ய வேண்டும். தர்மபுரியில், சிப்காட் பணிகளை விரைந்து துவங்க வேண்டும். ஒகேனக்கல்லில் இருந்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று, கிராம சபை கூட்டங்களில், புகையிலை பொருட்களை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் செய்த, டி.வி.எஸ்., வேணு சீனிவாசன், சுவாமி சிலைகளை திருட வாய்ப்பில்லை. இதில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பாக, மத்திய அரசுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் தமிழக அரசு செல்லக்கூடாது. அண்ணா பல்கலை மறுப்பீட்டு முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அன்பழகன், தொகுதி மக்களுக்கு, எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றாமல், பணம் சேர்ப்பதில் மட்டும் குறியாக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X