கேரளாவில் கன மழையால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் கன மழையால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பில்லை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: கேரளாவில் பெய்து வரும் கன மழையால், ரயில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை.
கேரள மாநிலம் இடுக்கி, பாலக்காடு, வயநாடு, மலப்புரம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. அங்குள்ள நீர் நிலைகள் நிறைந்துள்ளன. ஊர் முழுவதும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. ஆனால், ரயில்கள் வழக்கம் போல் கால தாமதமின்றி இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உடனடியாக ரயில்கள் மூலம் மற்ற பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது கேரளாவில் இருந்து வரும் ரயில்கள், பெரும்பாலும் வட மாநிலங்களுக்கு செல்கிறது. நேற்று காலை வரை, ரயில்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்பட்டன. ஒரு சில ரயில்கள் மட்டும், 15 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டது.

ரயில்வே அலுவலர்கள் கூறியதாவது: கேரள மழையால் ரயில்கள் ஏதும் நிறுத்தப்படவில்லை. சில ரயில்களின் வழிப்பாதையை தற்காலிகமாக மாற்றி அமைத்தல், குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே இயக்குவது என முடிவு செய்துள்ளோம். ஈரோடு, காவிரி ஆற்றின் நடுவே உள்ள இரும்பு பாலம் வழியே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தண்ணீர் அதிகளவில் செல்கிறது. பொறியியல் பிரிவு அதிகாரிகள் நீரோட்ட அளவை கண்காணித்து வருகின்றனர். அபாய கட்டத்துக்கு மேல் சென்றால் தகவல் தெரிவிப்பர். அப்போது ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படும். கடந்த, 2005ல் இரண்டு லட்சம் கன அடி வரை நீர் சென்றது. அப்போது எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. எனவே தற்போது பிரச்னை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X