கரை தொட்டு செல்லும் காவிரி: 87 குடும்பத்தாருக்கு மாற்று இடம் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரை தொட்டு செல்லும் காவிரி: 87 குடும்பத்தாருக்கு மாற்று இடம் ஏற்பாடு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: ஈரோடு காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரை ஓரங்களில் வசிப்போரை நேரில் சந்தித்து, கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்தார்.
மேட்டூர் அணைக்கு அதிக அளுவில் வெள்ள நீர் வருவதால், அணை நிரம்பி, 1.35 லட்சம் கனஅடி நீர், காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு, கரைகளை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனால், 18 வருவாய் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோரங்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படியும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு, கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தவிர, காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என எச்சரித்துள்ளார். 18 வருவாய் கிராமங்களில் வருவாய் துறை, போலீஸ், பொதுப்பணித்துறை, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கண்காணிக்கின்றனர். நேற்று காலை, கலெக்டர் பிரபாகர், ஈரோடு கருங்கல்பாளையம், பவானி பகுதியில் பல கிராமங்களில் ஆய்வு செய்தார்.

பின், அவர் கூறியதாவது: தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவானி கரையோர பகுதியில் வசித்த, 27 குடும்பங்கள் கல்யாண மண்டபத்திலும், கொடுமுடி பகுதியில் வசித்த, 60 குடும்பத்தார் எஸ்.எஸ்.டி., பள்ளியிலும் முகாம் அமைத்து தங்க ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள், செய்யப்பட்டுள்ளன. தாழ்வான, கரையோர புறம்போக்கில் வசிப்போருக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும், 6,000 அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க, முதல்வர் யோசனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2,800 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அங்கு, இவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன கால்வாய், மேட்டூர் வாய்க்காலிலும், முழு கொள்ளளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களும், வாய்க்கால் பகுதிக்கு செல்லவோ, குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ கூடாது என, எச்சரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ஜெயராமன், தாசில்தார் அமுதா ஆகியோர் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X