ரத்தப்பரிசோதனை கூட திரவங்களுக்கு தரச்சான்று: தரமற்ற, போலிகளை தடுக்க நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்தப்பரிசோதனை கூட திரவங்களுக்கு தரச்சான்று: தரமற்ற, போலிகளை தடுக்க நடவடிக்கை தேவை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: ரத்தப்பரிசோதனை கூடங்களில் பயன்படுத்தப்படும் திரவங்களுக்கு, அரசு, தரச்சான்று அளிக்க வேண்டும். அப்போதுதான், பரிசோதனை முடிவை உறுதிப்பட தெரிவிக்க முடியும் என, லேப்டெக்னீசியன்கள் வலியுறுத்தினர்.
சேலத்தில், தமிழ்நாடு பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். அதில், கோவையில், டிச., 16ல், சங்கம் சார்பில் உரிமை மீட்பு மாநாடு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, தேசிய தலைவர் காளிதாசன் கூறியதாவது: தமிழகத்தில், 8,000 ரத்தப்பரிசோதனை கூடங்கள் உள்ளன. அவை, 700 சதுரடி முதல், 1,500 சதுரடி அளவில் அமைந்திருக்க வேண்டும் என, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்களை, 'ஏ, பி, சி' என தரம் பிரித்து, 500 சதுரடி இருந்தால் போதும் என அறிவித்து, பரிசோதனை கட்டணத்தை, தமிழக சுகாதாரத்துறை முறைப்படுத்த வேண்டும். தனியார் கல்லூரிகளில், ஓராண்டு, இரண்டாண்டு முடித்த, டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னீசியன் (டி.எம்.எல்.டி.,) பட்டயப்படிப்பு செல்லாது என, அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. தற்போது கூடத்தில் பணிபுரியும், 90 சதவீதம் பேர், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள். அவர்களுடைய பணிக்கு உத்தரவாதம் வழங்கி, வரும் கல்வியாண்டு முதல், தனியார் பட்டயபடிப்புக்கு தடை விதிக்கலாம். அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டும், சம்பந்தப்பட்ட பட்டயப்படிப்பை அனுமதிக்க வேண்டும். அரசு ஒப்புதலுடன், மருத்துவக் கழிவை கொள்முதல் செய்யும், ராம்கி உள்ளிட்ட நிறுவனங்கள், கூடத்துக்கு தலா, 2,000 முதல், 3,000 ரூபாய் வரை கட்டணம் கேட்கிறது. அதை, 500 முதல், 750 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக, பரிசோதனைக்கு பயன்படும் திரவ ரசாயனங்களுக்கு, அரசு தரச்சான்று வழங்க வேண்டும். அப்போது தான், பரிசோதனை முடிவை, உறுதிப்பட தெரிவிக்க முடியும். தரமற்ற, போலி ரசாயனங்களை தடுக்க, இத்தகைய நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார். மாநில தலைவர் துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X