மைச்சர் கட்டும் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த மேற்பார்வையாளர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மைச்சர் கட்டும் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த மேற்பார்வையாளர் பலி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆரணி: அறநிலையத்துறை அமைச்சர், புதிதாக கட்டிவரும் வீட்டின், மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மேற்பார்வையாளர் இறந்தார். அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, சேவூரில், மூன்றடுக்கு கொண்ட புதிய சொகுசு வீடு கட்டி வருகிறார். இதில், ஒரு அடுக்கு கட்டப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பணி நடந்து வருகிறது. வீட்டின் கட்டுமான பணியை அமைச்சரின் உறவினரும், அ.தி.மு.க. கிளை அவை தலைவருமான குப்பன், 55, கண்காணித்து வந்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு வழக்கம்போல், பணி நடந்து கொண்டிருந்தபோது, முதல் மாடியிலிருந்து குப்பன் தவறி விழுந்து காயமடைந்தார். ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் பலியானார். மருத்துவர்கள் பரிசோதித்ததில், மாரடைப்பில் அவர் இறந்ததாக தெரிவித்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X