விஷாகா கமிட்டி: கனிமொழி அதிர்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஷாகா கமிட்டி: கனிமொழி அதிர்ச்சி

Updated : ஆக 13, 2018 | Added : ஆக 13, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கனிமொழி, விஷாகா கமிட்டி, பேஸ்புக்

சென்னை: திமுக கனிமொழி பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், தமிழ்நாடு காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உச்சநீதிமன்றம், பணி இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விஷாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று 1997ல் தீர்ப்பு வழங்கியது.
மத்திய அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை 2013ம் ஆண்டு செயல்படுத்தியது. அரசு அலுவலகங்களிலும், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.
சட்டத்தை அமல்படுத்த வேண்டிய, காவல்துறையிலேயே விஷாகா கமிட்டி இல்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது, அவமானகரமானது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
21-ஆக-201818:03:49 IST Report Abuse
Arasu ரொம்ப லேட்டான அதிர்ச்சி
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
15-ஆக-201801:45:19 IST Report Abuse
Dr.C.S.Rangarajan பலஆண்டுகளுக்குமுன், குடியிருப்புப்பகுதிகள் நிறைந்த பெசன்ட் நகரில் மீன் விற்பனை நிலையம் துவங்கும்போது, மாமிச உணவு புசிக்காத ஒரு மூதாட்டி, இந்தப்பகுதியில்,தாவர உணவுண்ணுவோர் நிறைந்த இடத்தில் மீன் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, தற்போதைய மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் அம்மூதாட்டியை கைதுசெய்யுமாறு அரசு பாதுகாவலருக்கு உத்தரவிட்டது மகளிர் பாதுகாப்புக்குகந்த செயலா? முதலைகள் கண்ணீர் வடிக்குமா இல்லையா என தெரியாவிட்டாலும், அரசியல் வாதிகள் முதலை கண்ணீர் வடிக்க தவறுவதேயில்லை.இன்றைய பதவிபோனால், நாளை இந்த இடத்தில், இதே தகுதியான பதவியை எண்ணிக்கூட பார்க்கமுடியாது. ஏன் எனில் சிபாரிசு செய்ய கலைஞர் இனி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஆக-201810:02:57 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் 1997ல் வழங்கிய தீர்ப்புக்கு 2018ல் கனிமொழி அதிர்ச்சி, 21 வருஷம் கோமாவில் இருந்தார்கள் போல, இதுவா உங்க டக்கு???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X