அழகிரிக்கு பதில் சொல்ல தேவையில்லை: தி.மு.க. எம்.எல்.ஏ., | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழகிரிக்கு பதில் சொல்ல தேவையில்லை: தி.மு.க. எம்.எல்.ஏ.,

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அழகிரி, திமுக, DMK

சென்னை: அழகிரிக்கு பதில் சொல்ல தேவையில்லை என சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,


அழகிரி என்ன கருத்து சொன்னாலும் வெளியே இருந்து சொல்லும் கருத்தாகும். அவர் ஏற்கனவே கருணாநிதியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். இதற்கு விரிவான தகவலை நாளைய செயற்குழுவில் ஸ்டாலின் தெரிவிப்பார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. கருணாநிதி மறைவில் இருந்தே இன்னும் நாங்கள் மீளவில்லை. கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.





உள்கட்சி மோதல் ?


சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி, குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்; எனது ஆதங்கத்தை அப்பா நினைவிடத்தில் தெரிவித்தேன். கட்சியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
14-ஆக-201808:57:43 IST Report Abuse
arudra1951 ஓரும் மனிதர் இறந்து போனார்.அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் போய் அவர் மகன் தனது ஆதங்கத்தை சொல்லுகிறாராம்.அதைக்கேட்டு அவர் அதை நிவர்த்தி செய்வாராம். பகுத்தறிவுசிகள் எங்கள் காதுல பூ சுத்துறீங்க .ஈரோடு ராமசாமி கோவிச்சுக்க மாட்டாரா
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஆக-201821:07:46 IST Report Abuse
Panneerselvam Chinnasamy சும்மா இருந்த அழகிரியை ...பேட்டி என்று இழுத்து தேவையில்லாமல் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டார்கள்... இந்த ஊதவிடப்பட்ட பலூன் வெடிக்கும் வரை சிலருக்கு குதூகலம்...அழகிரி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்... திமுகவில் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டால் ,கட்சிக்குள் தேவை இல்லாமல் பிரச்சினைகள் வரும்...அவரது தடாலடி வேலையால் ஏற்பட்ட கெட்ட பெயர் தொடரும்.. தந்தையின் கட்டளையை மதித்து நல்ல பிள்ளையாய் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் அவருக்கும் நல்லது கட்சிக்கும் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
13-ஆக-201819:28:05 IST Report Abuse
Vasanth Saminathan அழகிரி தலைவராக இருந்திருந்தால் இந்நேரம் பாதி எம் எல் ஏக்களை வாங்கியிருப்பார். திமுகவும் ஆட்சி கட்டிலிலும் அமர்ந்திருக்கும்.
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
14-ஆக-201815:27:31 IST Report Abuse
Abdul Rahmanஉண்மைதான். சுடலை என்றும் செயல்படாத தலைவர்தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X