ஊழல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஊழல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை

புதுடில்லி: 'மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அரசு பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், கற்பழிப்பு, கொலை மற்றும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊழல் குற்றவாளி, பொது மன்னிப்பு, இல்லை


இந்தாண்டு, அக்., 2ல் துவங்கி, அடுத்த ஒரு ஆண்டு முழுவதும், மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட

உள்ளது.

பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், சிறைக் கைதிகளைவிடுவிப்பது குறித்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது: சிறைகளில் உள்ள கைதிகளில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்தில் பாதியை முடித்த, 55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், திருநங்கையர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஆகியோரை, பொது மன்னிப்பு திட்டத்தின்கீழ் விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.


ஆனால், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை, கொலை மற்றும் ஊழலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் மற்றும்

Advertisement

குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு கிடையாது.பண மோசடி, அன்னிய செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
15-ஆக-201814:14:35 IST Report Abuse

Gnanasekaran Vedachalamகுற்றங்களில் mannipu

Rate this:
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
15-ஆக-201814:12:35 IST Report Abuse

Gnanasekaran Vedachalamஊழல் குற்றவாளிகள் சிறைச்சாலையில் உழைத்து சாப்பிட வேண்டும் இதன் மூலம் அரசின் பொது செலவு குறையும் . குற்ற வாளிகள் எண்ணிக்கை அதிரிகரிப்பால் இது தேவை

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஆக-201819:25:36 IST Report Abuse

Pugazh Vதமிழ் மைந்தன் என்ற பேரில் ஒளிந்திருக்கும் ஆசாமி ஏன் இந்த செய்தியில் திமுகவை இழுக்கிறார்? கடுமையாக பாதிக்கப்பட்டவர் போல. பாவம்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X