ஜோரான சுதந்திர தின விழா ஒத்திகை...| Dinamalar

ஜோரான சுதந்திர தின விழா ஒத்திகை...

Updated : ஆக 14, 2018 | Added : ஆக 14, 2018

நம் நாட்டின் 72 வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் பெருமையுடன் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.இந்த விழாவினை எந்த அளவிற்கு சீரும் சிறப்புமாக நடத்தலாம் என கடந்த பல நாட்களாக திட்டமிட்டு வருகின்றனர்.

சென்னையில் நடைபெறும் விழா எப்போதுமே மிகவும் விசேஷமானது.முதல்வர் விழாவி்ல் கலந்து கொண்டு திறந்த ஜீப்பில் வலம் வந்து காவல் துறையின் பல்வேறு பிரிவு வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு அவர்களது மரியாதையை ஏற்றுக்கொள்வார்.

பின்னர் கோட்டை கொத்தளத்தி்ல் கொடியேற்றிவைத்து சுதந்திர தினவிழா பேச்சினை வழங்குவார் இவரது பேச்சில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெற்று இருக்கும் பேசி முடித்த பிறகு அப்துல்கலாம் மற்றும் கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகள் உள்ளீட்ட விருதுகளை வழங்குவார்.

ஒவ்வொரு நிமிட நிகழ்வும் வரையறுக்கப்பட்டு நடக்கும் இந்த நிகழ்விற்கான ஒத்திகை சிறப்பாக நடந்து முடிந்தது.

காவலர் பிரிவில் இசைக்குழுவினர்,குதிரை வீரர்கள்,நீலகிரிபிரிவு வீரர்கள் என் பல்வேறு பிரிவினர் பங்கேற்று அணிவகுத்து வந்தனர்.பெண் காவலர் பிரிவினர் நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் மிடுக்கான நடையுமாக அவர்கள் நடந்துவந்த விதம் சிறப்பாக இருந்தது.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X