ரூ.50 லட்சம் மோசடி : தம்பதி தலைமறைவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.50 லட்சம் மோசடி : தம்பதி தலைமறைவு

Added : ஆக 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: கொடைக்கானலில், பாரா மெடிக்கல் கல்லுாரி நடத்தி, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டை சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன், கார்த்திக்குமார். இவர்கள் திண்டுக்கல், எஸ்.பி., சக்திவேலுவிடம் அளித்த மனு: கொடைக்கானலை சேர்ந்த, டேவிட் பீட்டரும், அவரது மனைவியும் கொடைக்கானலில் பாரா மெடிக்கல் கல்லுாரி நடத்தி வந்தனர். பின், 'சிண்டிகேட் வெல்பேர் சொசைட்டி' என்ற அமைப்பை துவக்கினர். இதில் உறுப்பினர்களாக சேர்பவர்கள், 2.25 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்ய வேண்டும். டிபாசிட்தாரர்களுக்கு, மாதம்தோறும் ஊக்கத்தொகையாக, 12 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தனர். இதை நம்பி, 21 பேர் அந்த நிறுவனத்தில் டிபாசிட் செய்தோம். நிறுவனத்தை மூடி, தம்பதி தலைமறைவாகி விட்டனர். இவர்கள், 50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். நாங்கள் டிபாசிட் செய்த தொகையை வாங்கித்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.இது குறித்து, தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
15-ஆக-201813:18:12 IST Report Abuse
Gnanasekaran Vedachalam இந்த சுதந்தர கொண்டாட்ட நாளில் மக்கள் அறியாமையினால் பல்வேறு மோசடிகளில் ஏற்படும் செல்வ இழப்பை தவிர்த்து அரசின் திட்டங்களில் பயன் அடைய கையூட்டை தவிர்த்து வாய்மையுடன் செயல் பட்டு அரசுக்கு புகழ் சேர்க்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X