சி.பி.ஐ.க்கு எதிராக 350 ராணுவ ஜவான்கள் முறையீடு| Dinamalar

சி.பி.ஐ.க்கு எதிராக 350 ராணுவ ஜவான்கள் முறையீடு

Added : ஆக 15, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சி.பி.ஐ.க்கு எதிராக 350 ராணுவ ஜவான்கள் முறையீடு

புதுடில்லி: தங்கள் மீது சி.பி.ஐ தொடர்ந்துள்ள எப்.ஐ.ஆரை எதிர்த்து 350 ராணுவ ஜவான்கள் உச்சநீதிமன்றத்தி்ல் முறையீடு செய்துள்ளனர்.காஷ்மீர், மற்றும் மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த ராணுவ அதிகாரிகள், சிலர் அத்துமீறியதாகவும், மனித உரிமையை மீறி நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.இந்நிலையில் 350 ராணுவ வீரர்கள் மீது சி.பி.ஐ. பல்வேறு பிரிவுகளின் எப்.ஐ.ஆர், வழக்குப் பதிய திட்டமிட்டிருந்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராணுவ வீரர்கள் முறையீடு செய்தனர். அதில் இது போன்ற சி.பி.ஐ.யின் செயல்பாடு ராணுவ வீரர்களின் கண்ணியத்திற்கும்,, தேச ஒற்றுமைக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்கு சமமாகும் எனவே இந்த நீதிமன்றம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றனர்.ராணுவ வீரர்கள் சார்பில் அமித்குமார் ஆஜரானார். நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வீல்கர் ஆகியோர் விசாரித்தனர். வழக்கின் விசாரணை 20-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
15-ஆக-201812:28:40 IST Report Abuse
Darmavan சிபிஐ ஐ இதில் நுழைத்தது தவறு...ராணுவ சம்பந்தப்பட்ட விஷயங்கள் இப்படி வெளியில் வருவது தவறு. ராணுவ ஒழுக்கம் கெடும் .இதில் கோர்ட் சரியாக முடிவெடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
15-ஆக-201811:06:40 IST Report Abuse
Lawrence Ron நீ தப்பு பண்ணி யா இல்லையா னு கேட்டா எஸ் ஓர் நோன்னு சொல்லு அதை மறைக்க கண்ணியம் கத்ரியக்காய் எல்லாம் ஏன் கூப்புடுறீங்க undefined கேஸ் ராணுவது மேல இல்ல தப்பு பண்ண குற்றவாளிகள் மேல் தானே
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
15-ஆக-201808:32:34 IST Report Abuse
rajan.  நமது ராணுவம் என்பது எதிரிகளை துவம்சம் செய்து தாய்நாட்டை பாதுகாப்பதற்கு என்றே உருவாக்க பட்டதாகும். இந்த மாதிரி அவதூறுகள் ராணுவத்தின் நன்மதிப்பை கெடுக்கும் என்பதற்காகவே ராணுவ தளபதிகள் ராணுவத்தை உள்நாட்டு கலவரங்களை ஒடுக்க மறுப்பார்கள். உள்நாட்டு கலவரங்கள் போலீஸ் படையால் தான் சரி பண்ண வேண்டும் என்பதன் கருத்து இதுவே. எனவே இந்த அவலங்களுக்கு அரசியல்வாதிகள் ஒரு போதும் இடம் கொடுக்க கூடாது.
Rate this:
Share this comment
Being Justice - chennai ,இந்தியா
15-ஆக-201810:52:09 IST Report Abuse
Being Justice ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து பேசாதீர்கள். ஏன் போலீஸ் துறையும் கூட தான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உருவாக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சரியா? எல்லாம் இடங்களிலும் தவறுகள் நடக்கக்கூடும். என்ன நடக்க வேண்டும் என்று கருத்து கூறலாம். ஆனால் நடந்த தவறுகளை மறைக்க முயலக்கூடாது....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
15-ஆக-201812:25:48 IST Report Abuse
Darmavanஎது தவறு என்பதில்தான் தவறு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X