18 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

18 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை

Updated : ஆக 15, 2018 | Added : ஆக 15, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பூச்சி கொல்லி மருந்துகள், மத்திய அரசு , தடை

புதுடில்லி: 12 பூச்சி கொல்லி மருந்துகளை உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 6 மருந்துகள் 2020 டிசம்பர் முதல் தடை விதிப்பதாகவும் கூறியுள்ளது.


பரிந்துரை

66 பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு கடந்த 2013ல் குழு ஒன்றை அமைத்தது. இந்த 66 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. மத்திய அரசு அமைத்த குழு, 2 வருடங்களுக்கு முன்னர், 18 மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்திருந்தது.


எச்சரிக்கை

இந்நிலையில், 12 பூச்சி கொல்லி மருந்துகள் ஆகஸ்ட் 8 முதல் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த மருந்துகளை இறக்குமதி செய்பவர்கள், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 6 பூச்சி கொல்லி மருந்துகள் 2020 டிசம்பர் முதல் தடை விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.


தடை செய்யப்பட்ட மருந்துகள்:

பெனோமில், கார்பரில், டியாஜினோன், பெனாரிமோல், பென்தியோன், லினுரோன், மெதோக்சி, எதில் மெர்குரி குளோரைடு, மெதில் பராதியோன், சோடியம் சியானிட், தியோமெடோன், திரிமோர்ப், அலக்ளோர், திகுளோர்வோஸ்,போரேட், பாஸ்பாமிதோன், திரியஜோபோஸ், திரிகுளோர்போன்

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-201816:51:21 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வரவேற்கிறேன். இயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு மானியமும் , மற்ற ரசாயன உரம் மற்றும் பூச்சி கோழிகளுக்கு வரியும் விதியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
16-ஆக-201815:03:11 IST Report Abuse
anand வெள்ளைக்காரன் கொண்டு வருவது தான் நமக்கு பிடிக்கிறது..மதமும் சரி, மருந்தும் சரி.. இவற்றை தவிர்ப்போம்..
Rate this:
Share this comment
Cancel
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
16-ஆக-201811:58:31 IST Report Abuse
வேலங்குடியான் எங்கப்பா காணுமே??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X