புது சம்பளம் நிர்ணய பணியில் 'போலி ரசீது டீன்' சேலம் பெரியார் பல்கலையில் குமுறல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புது சம்பளம் நிர்ணய பணியில் 'போலி ரசீது டீன்' சேலம் பெரியார் பல்கலையில் குமுறல்

Added : ஆக 17, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம், பெரியார் பல்கலையில், ஏழாவது சம்பள கமிஷன்படி, சம்பளம் நிர்ணயிக்கும் பணி, 'போலி' ரசீது டீனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக அரசு கல்லுாரிகள் மற்றும் பல்கலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, புது சம்பளத்தை நிர்ணயிக்க, உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலையில், 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, சம்பளம் நிர்ணயிக்கும் பணி, டீன் கிருஷ்ணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவர் மீது, 'போலி' ரசீது தயாரித்து மோசடி செய்த வழக்கு, டீன் பணி நீட்டிப்பில் விதிமீறல் என, சர்ச்சைகள் தொடர்கின்றன.இது குறித்து, பல்கலை ஆசிரியர்கள் கூறியதாவது:சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த, நிபுணத்துவம் வாய்ந்த குழுவை அமைக்க வேண்டும். கருவூல அல்லது வருவாய்த் துறை உயர் அலுவலர் அடங்கிய குழு, ஒவ்வொரு ஆசிரியரிடமும் கருத்து கேட்பு நடத்திய பின், சம்பளம் நிர்ணயிக்கும் பணி நடக்கும். பெரியார் பல்கலையில், குழு அமைக்கப்படாமல், டீன் கிருஷ்ணகுமார் தலைமையில், அப்பணி நடக்கிறது. ஆறாவது சம்பள கமிஷன்படி, சம்பளம் நிர்ணயிக்கும் போது, தனக்கு கூடுதலாக நிர்ணயித்துக் கொண்ட கிருஷ்ணகுமாரிடம், 5.30 லட்சம் ரூபாயை உடனடியாக மீட்குமாறு, தணிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 'போலி' ரசீது மூலம், மோசடி செய்ததாகவும், அவர் மீது வழக்கு உள்ளது. ஆசிரியரல்லா பணியிடமான, டீன் பதவியில், 58 வயதை கடந்தும், விதிகளை மீறி நீடிக்கிறார். இதனால், அவர், நேர்மையாக சம்பளம் நிர்ணயம் செய்வார் என்ற நம்பிக்கை, ஆசிரியர்களிடையே இல்லை. தனக்கு வேண்டாதவர்களுக்கு, குறைவாக நிர்ணயிக்கும் பட்சத்தில், பலர் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. முறைப்படி குழு அமைத்து, சம்பளம் நிர்ணயிக்க, உயர்கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
20-ஆக-201815:13:11 IST Report Abuse
Gnanasekaran Vedachalam எங்களுக்கு முறைப்படிய கிடைக்க வேண்டியது கிடைக்கல கொஞ்சம் ஹெல்ப் பண்ணு பாஸ்.
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
18-ஆக-201818:18:57 IST Report Abuse
Gnanasekaran Vedachalam kalvi durai alankola patta nilayil uyar kalvi durai merkanda vizhiyathai kandum kaanamal irukka kudaadu.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஆக-201807:57:13 IST Report Abuse
Bhaskaran தலைமையே ஊழல்வாதி எப்படி நீதி கிடைக்கும் வேறு ஆளைபோடனும் அல்லது ஊழியர்களை கலந்து ஆலோசனைசெய்து வேறு ஏற்பாடு செய்யனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X