அ.தி.மு.க., செயற்குழு கூடுகிறது கட்சியினர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., செயற்குழு கூடுகிறது
கட்சியினர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.

 அ.தி.மு.க., செயற்குழு, கூடுகிறது,கட்சியினர்,எதிர்பார்ப்பு, நிறைவேறுமா?


அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், 2017 செப்., 12ல், அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், பொதுச் செயலர் பதவியிலிருந்து, சசிகலா நீக்கப் பட்டார். பொதுச்செயலர் பதவிக்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன.


அதன்பின், கட்சி வேகமெடுக்கும் என எதிர் பார்த்த, கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தினகரன் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் காரணமாக, ஆயிரக் கணக்கான பதவிகள் காலியாகின. அவற்றை நிரப்ப, இதுவரை, நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.முக்கிய பிரமுகர்களுக்கு பதவி வழங்குவதற்காக, மாவட்டங்களை பிரிக்க,

முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவு செய்தனர். அதற்கு, அமைச்சர்கள் சம்மதிக்க வில்லை. அதேபோல,முக்கிய முடிவுகளை எடுக்க, வழி காட்டி குழு அமைக்க முடிவு செய்யப் பட்டது. முதலில், அதில், 11 பேர் இடம்பெற முடிவு செய்தனர்.ஏராளமானோர் கேட்டதால், குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை, 15 ஆக்க முடிவு செய்தனர். ஆனால், இன்னமும் உறுப்பினர்களை தேர்வு செய்வதில், சிக்கல் தொடர்கிறது.


அதேபோல, காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதிலும் சிக்கல் உள்ளது; கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. விரைவில், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன், காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும்.


திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதி களுக்கு, டிசம்பரில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு, கட்சியினரை தயார் செய்ய வேண்டும். உறுப்பினர் சேர்க்கை, இன்னமும் முடியவில்லை. பல முறை கால நீட்டிப்பு வழங்கியும், ஏற்கனவே இருந்த, ஒன்றரை கோடி உறுப்பினர்கள் எண்ணிக்கையை நெருங்கமுடிய வில்லை.


அதேநேரம், தினகரன் தனிக் கட்சியை துவக்கி, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்து விட்டதாகக் கூறி வருகிறார். கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களை யும் தக்க வைத்துக்கொள்ள, அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை, பழனி - பன்னீர் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்,

Advertisement

23ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, அ.தி.மு.க., செயற்குழு கூட்டம்,அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கூட்டத் தில் கட்சியை பலப்படுத்த, ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.


கிளை நிர்வாகிகளுடன் பழனி - பன்னீர் சந்திப்பு



அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் முடிந்ததும், கட்சியின் கிளை செயலர்கள், நகர செயலர்கள், ஒன்றிய செயலர்கள், பகுதி செயலர்களை, மாவட்ட வாரியாக சந்தித்து பேச, முதல்வர் மற்றும் துணை முதல்வர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - chennai,இந்தியா
19-ஆக-201821:32:17 IST Report Abuse

karthiஎடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியை தன் கையில் முழுவதுமாக கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில் பன்னீர் அவர்களிடம் அவ்வப்பொழுது ஆலோசனை பெற வேண்டும். அம்மாவை போல் ஒற்றை தலைமையின் கீழ் கட்சி நடப்பது தான் தமிழ்நாட்டு அரசியலுக்கு சரியாக வரும். இரட்டை தலைமை சரி வராது. அம்மாவின் உண்மையான விசுவாசிகள், தொண்டர்கள் அதிமுக தலைவர் பழனிசாமியை நம்பி உள்ளனர். தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதா அம்மாவுக்கு துரோகம் செய்தவர்களை ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள். அம்மாவின் மர்ம மரணத்தை மக்களும், தொண்டர்களும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால், அதிமுகவை பலப்படுத்த எல்லா நடவடிக்கைகளும் முதல்வர் பழனிசாமி எடுக்கவேண்டும். அதற்க்கு பன்னீர் அவர்கள் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும்.

Rate this:
C Suresh - Charlotte,இந்தியா
19-ஆக-201815:16:58 IST Report Abuse

C Sureshதினகரன் பின் சென்ற கட்சி நிர்வாகிகளை திருப்பி இழுக்க முயற்சிக்க வேண்டும்.. பிரிந்து போன 18 எம்.எல்.எ களை திருப்பி இழுத்தால் - திமுகவுக்கு வெற்றி முகம் தான்.. அதிமுகா வோட்டு திமுகாவிற்கு செல்ல வாய்ப்பில்லை.. கமலுக்கு மக்கள் ஆதரவு சுத்தமாக இல்லை.. ரஜினியை நிறைய பேருக்கு பிடிக்கும் ஆனால் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்பதே கேள்வி. மற்ற கட்சிகள் தமிழ் நாட்டில் ரப்பர் பெட் கட்சிகள் தான்..

Rate this:
tamil - coonoor,இந்தியா
19-ஆக-201811:08:07 IST Report Abuse

tamilமோடி அவர்களின் தயவில் ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது அனைத்து மக்களின் ஏகோபித்த முடிவு, ஆட்சி இருப்பதால் அ.தி.மு.க பற்றிய செய்திகளுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கிறது, முதல்வர் என்கிற அந்தஸ்தில் எடப்பாடியாருக்கு ஒரு மரியாதை கிடைக்கிறது, ஆட்சி என்கிற மகுடம் இல்லை என்றால், கட்சி கோவிந்தா தான், அதற்கு பின் எத்தனை குழுக்கள் போட்டாலும் செலவு செய்யவும், கட்சியில் ஈடுபாடு காட்டவும் ஆட்கள் இருக்கப்போவதில்லை,

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X