ஸ்டாலினா, ரஜினியா: குழப்பத்தில் வாசன் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டாலினா, ரஜினியா: குழப்பத்தில் வாசன்

வரும் லோக்சபா, சட்டசபை தேர்தலில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுடன் கைகோர்ப்பதா அல்லது நடிகர் ரஜினியுடன் கைகோர்ப்பதா என்ற குழப்பத்திற்கு, த.மா.கா., தலைவர் வாசன் தள்ளப்பட்டுள்ளார்.

ஸ்டாலினா, ரஜினியா,குழப்பத்தில், வாசன்


கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், மக்கள்நலக் கூட்டணியில், த.மா.கா., இடம்பெற்று, படு தோல்வி அடைந்தது. உள்ளாட்சித் தேர்தலில், த.மா.கா.,வை, தி.மு.க., கூட்டணியில் சேர்க்க, அக்கட்சியின் செயல் தலைவர்ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார். ஆனால், அப்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சிலர், 'வாசனை சேர்க்க வேண்டாம்...' என, 'வத்தி' வைத்தனர்.


அதை தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வை சேர்க்கும் எண்ணத்தை,

ஸ்டாலினும் கைவிட்டார். ஆனால், வாசன் உதவி யாளர் பார்த்தசாரதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த, ஸ்டாலின் வந்தபோது, மீண்டும், இருவரும் நெருக்கமாகினர். ஸ்டாலின் பிறந்த நாளுக்கு, வாசன் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


தொடர்ந்து, காவிரிஉள்ளிட்ட முக்கிய பிரச்னை தொடர்பாக, அறிவாலயத்தில் நடந்த, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டங்களில், வாசன் ஒரேயொரு முறை மட்டும் பங்கேற்றார்.பல கூட்டங்களுக்கு, வாசன் அழைக்கப்படவில்லை.


இந்நிலையில், ஜன., 1 முதல், நடிகர் ரஜினி, அரசியல் ஆர்வம் காட்டி வருகிறார். வரும் லோக் சபா, சட்டசபை தேர்தலுக்கு முன், ரஜினி, புதிய கட்சி துவங்கியதும், அவருடன் இணைந்து, வாசன் செயல்பட வேண்டும் என, த.மா.கா., மூத்த துணைத் தலைவர், ஞானதேசிகன் வலியுறுத்தி உள்ளார். த.மா.கா., தலைமை நிலைய செயலர் ஜி.ஆர். வெங்கடேஷ் ஏற்பாட்டில், சென்னையில் நடந்த விழா ஒன்றில்,வாசனும்,காந்தியமக்கள் தலைவரும், ரஜினியின் நண்பருமான தமிழருவி மணியனும் பங்கேற்றனர்.


அப்போது, இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். ரஜினி கட்சி துவங்கியதும், த.மா.கா.,வை கூட்டணி யில் சேர்ப்பது குறித்து, வாசன் சார்பில் தமிழருவி மணியன், ரஜினியிடம் பேச உள்ளார்.இந்நிலையில்,

Advertisement

கருணாநிதியின் மறைவுக்கு, 26ம் தேதி, அனைத்து கட்சி இரங்கல் கூட்டம், ஸ்டாலின் தலைமையில், திருநெல்வேலியில் நடக்கிறது. இதற்கு, வாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், வரும் தேர்தலில், தி.மு.க., கூட்டணியா அல்லது ரஜினி கட்சியுடன் கூட்டணியா என்ற குழப்பம், வாசனுக்கு உருவாகி உள்ளது.


மறைந்த மூப்பனாரின் பிறந்த நாள் விழா பொது கூட்டத்தை, கோவையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், கூட்டணி அறிவிப்பை, வாசன் வெளியிடுவார் என்ற எதிர் பார்ப்பு, அக்கட்சி வட்டாரங்களில் எழுந்து உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-ஆக-201821:24:34 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இவரு சுகவாசி.. அப்படியே இருந்து பழகிட்டார். அரசியல் இவருக்கு சரிப்பட்டு வராது..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-ஆக-201821:23:39 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தோக்குற கட்சியோட கைகோர்ப்பதில் வல்லவர். தன்னை மரியாதை குறைவாக நடத்துபவர்களுடன் கூட்டணி வைப்பதில் வித்தகர்.

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
19-ஆக-201819:21:15 IST Report Abuse

Solvathellam Unmaiகுஜராத்தில் டீ கடையும், உங்களுக்கு பீடா கடையும் ரெடியா இருக்கு

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X