delhi ush | தமிழக சிந்தனையில் மோடி| Dinamalar

தமிழக சிந்தனையில் மோடி

Updated : ஆக 29, 2018 | Added : ஆக 18, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 டில்லி உஷ்,delhi ush, tamil nadu, PMModi, modi, narendra modi, alagiri, dmk,karunanidhi, bjp, vajpayee, edapadi palanisamy, o.paneerselvam, ops, thamdidurai, admk, pmk, mdmk, பா.ஜ., பாஜ, பிரதமர் மோடி, மோடி, நரேந்திர மோடி,திமுக, கருணாநிதி,அழகிரி, வாஜ்பாய், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ்., தம்பிதுரை, அதிமுக, பாமக, மதிமுக

செங்கோட்டையில் சுதந்திர தின உரையின் போது, பாரதியார் கவிதையை, தன்னால் முடிந்தவரை தமிழில் படித்து, தமிழர்களைப் பெருமைப்படுத்தினார், பிரதமர் மோடி.'தமிழர்கள் மொழியோடு ஒன்றியவர்கள். நீங்கள், தமிழிலேயே இந்தக் கவிதையைப் படித்தால், தமிழக மக்கள் பரவசப்படுவர்' என, மோடிக்கு ஆலோசனை கூறப்பட்டது. இதையடுத்து, பாரதியின் கவிதையை படிக்க, அதிக நேரம் பயிற்சி எடுத்தார், மோடி. 'தமிழகத்தை பற்றிய சிந்தனையுடனேயே, பிரதமர் இருக்கிறார்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.'அழகிரி தனிக்கட்சி துவங்கப் போவதாக செய்திகள் அடிபடும் நிலையில், பா.ஜ.,வுக்கும், அழகிரிக்கும் என்ன சம்பந்தம்' என, கேள்விகள் எழுகின்றன.தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த, பிரதமர் மோடி, சென்னை வந்தபோது, 'அழகிரி எங்கே' எனக் கேட்டது உண்மை தான்.ஆனால், அழகிரிக்கு பின், பா.ஜ., இல்லை என, திட்டவட்டமாக சொல்கின்றனர் மூத்த தலைவர்கள். ஆனால் அழகிரியோ, 'அடுத்த லோக்சபா தேர்தலில், மோடி வெற்றி பெறுவாரா? பா.ஜ.,வின் நிலை எப்படி இருக்கும்' என, டில்லி நண்பர்களிடம் விசாரித்து வருகிறார்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்த கட்சியும் எங்களோடு கூட்டணி வைக்காது. அடுத்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சிக்குமே ஒட்டு மொத்தமாக அதிக தொகுதிகள் கிடைக்காது.எனவே, தேர்தலுக்குப் பின் அமையவுள்ள கூட்டணியில், பா.ஜ., முக்கிய பங்கு வகிக்கும். மத்திய அரசில் அமைச்சர் பதவிக்காக, தமிழக கட்சிகள் எங்களிடம் தான் வந்து நிற்க வேண்டும்.இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.


முதல்வருக்கு, 'அட்வைஸ்'


மறைந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாஜ்க்கு அஞ்சலி செலுத்த, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், டில்லி வந்திருந்தனர்.தமிழ்நாடு இல்லத்திலிருந்து, வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்திற்கு செல்ல, அனைவரும் காரில் கிளம்பினர்.
முதல்வரின் கார், தமிழ்நாடு இல்ல வாசலிலிருந்து கிளம்ப, உடனடியாக, தம்பிதுரை, தன் காரிலிருந்து அவசரமாக இறங்கி, முதல்வரின் காரை நோக்கி ஓடினார். 'நிறுத்து... நிறுத்து' என, கத்தினார். உடனே, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கார்கள் நின்றன.முதல்வரின் கார் டிரைவரை பார்த்து, 'கழட்டு, கழட்டு' என, குரல் கொடுத்தார், தம்பிதுரை எதை கழட்டுவது என புரியாமல், டிரைவர் குழப்பமடைந்தார். காரின் முன்னாள் இருந்த தேசியக் கொடியைக் காட்டினார், தம்பிதுரை.'தேசிய தலைவர் ஒருவர் இறந்தால், அவருக்கு அஞ்சலி செலுத்த போகும் போது, தேசியக் கொடி வண்டியில் இருக்கக் கூடாது. இந்த சமயத்தில், காரில் தேசியக் கொடியோடு அஞ்சலி செலுத்த போவது, சம்பிரதாயத்திற்கு எதிரானது' என, முதல்வருக்கு விளக்கினார் தம்பிதுரை.முதல்வரும், தம்பிதுரை கூறுவதை அமைதியாக கேட்டார். இதையடுத்து, முதல்வர் மற்றும் துணை முதல்வர் கார்களில் இருந்து, தேசியக் கொடிகள் கழற்றப்பட்டன.மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்தது.-

அமைச்சர்கள் எப்போதுமே, விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை, டில்லி வந்த போது, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் ஜெயகுமார், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், 'இண்டிகோ' விமானத்தில் வந்தனர்.இந்த விமானத்தில் முதல் வகுப்பு கிடையாது. வாஜ்பாய் உடல், பா.ஜ., அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன், முதல்வரும், துணை முதல்வரும் அஞ்சலி செலுத்த விரும்பினர். இதனால், அவசரம் அவசரமாக, இண்டிகோ விமானத்தில் கிளம்பி, அதிகாலை, 2:00 மணிக்கே டில்லி வந்து, அஞ்சலி செலுத்தினர்.


மலரும் நினைவுகள்!-


கடந்த, 1999லிருந்து, 2004 வரை, தே.ஜ., கூட்டணி, மத்தியில் ஆட்சி நடத்தியது. வாஜ்பாய், பிரதமராக பதவி வகித்தார். அப்போது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பலர், மத்திய அமைச்சர்களாக இருந்தனர். தமிழகத்திலிருந்து, தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள், இந்த கூட்டணியில் இருந்தன. இந்த கட்சி, எம்.பி.க்கள், அமைச்சர்களாகவும் இருந்தனர்.அப்போது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம்- நடந்தது. தமிழகத்தின் வட மாநிலங்களில் பிரபலமாக இருந்த அந்த தமிழக கூட்டணி கட்சி தலைவர், அவரது கட்சியினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலாகா ஒதுக்கப்படவில்லை என வருத்தப்பட்டார்.

அவர், பல முறை வாஜ்பாயைச் சந்தித்தார். ஆனால், அவரது வருத்தத்தை, பிரதமர் வாஜ்பாயிடம் சரியாக சொல்ல முடியவில்லை. தன் கட்சியின் மூத்த, எம்.பி.,யை அழைத்து,' எங்களுக்கு நல்ல இலாகா வேண்டும் என, நான் கூறியதாக பிரதமரிடம் சொல்' என, அனுப்பி வைத்தார்.இந்த மூத்த, எம்.பி., நன்றாக ஆங்கிலம் பேசக் கூடியவர்; ஹிந்தி, ஓரளவு புரியும். எனவே அந்த, எம்.பி., வாஜ்பாயிடம் துாது போனார். வாஜ்பாயைச் சந்தித்து, 'எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சரவை இலாக்காக்கள் ஒன்றும் சரியில்லை. எங்கள் தலைவர் வருத்தமாக உள்ளார். நல்ல இலாகாக்களை எங்களுக்கு கொடுங்கள்' என, சமயம் பார்த்து கூறினார்.பொறுமையாகக் கேட்ட வாஜ்பாய், சிரித்தபடியே, 'உங்கள் தலைவர், இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறாரா' என, கேட்டார்.

இதைக் கேட்ட அந்த, எம்.பி., ஆடிப் போனார். என்ன பதில் சொல்வது என புரியாமல் தவித்தார். அவர் தவிப்பதை பார்த்த வாஜ்பாய்,'நீங்கள் போய் வாருங்கள். உங்கள் தலைவரிடம் நான் பேசுகிறேன்' என, எம்.பி.,யை அனுப்பி வைத்தார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வை, சமீபத்தில், தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்டார், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-செப்-201805:26:04 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டில் பணம் வாங்கி வோட்டு போடுவார்கள் அதிகம். இப்படியே பழகி விட்டார்கள். தலைவர் கால்களில் விழுந்தும் அரசியல்வாதிகள் பழகி விட்டார்கள். இது இரண்டும் ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
POORMAN - ERODE,இந்தியா
31-ஆக-201808:36:00 IST Report Abuse
POORMAN ஆமாம், இந்த தமிழர்களை மட்டும் என்ன பண்ணுனாலும் காவி பக்கம் இழுக்க முடியலையே. ஒன்னு பணத்துக்கு ஓட்டு போடறானுங்க இல்ல தமிழ் தமிழ் ன்னு குலவையிட்ட ஓட்டு போடறானுங்க இல்லாட்டி கடவுள் இல்லை சாதிகள் சமம்னு சொன்ன ஓட்டு போடறானுங்க. காசு செலவு இல்லாம மொதல்ல முயற்சி பண்ணலாம்னு தமிழ் ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கு மோடி கட்சி. அடுத்து பணத்தை விடுவானுங்கோ. அதுக்கும் போட்டி வந்தால் கடவுள் இல்லைன்னு கூட சொல்லுவானுங்கோ. மறந்துகூட வர்ணாசிரம, மனு தர்மத்தை எதிர்க்க மாட்டானுங்க .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X