லோக்சபா தேர்தலில் கூட்டணி கணக்கு... மாறுமா? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
லோக்சபா, தேர்தலில், கூட்டணி ,கணக்கு,மாறுமா? தமிழகத்தில் தனித்து, விடப்பட்ட, கட்சிகள், தவிப்பு

தமிழகத்தில், இரு பெரும் கட்சி தலைவர்கள் மறைவை அடுத்து, லோக்சபா தேர்தலில், கூட்டணி கணக்கு மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், எந்த கட்சி, எதனுடன் கூட்டணி அமைக்கும் என, புரியாத நிலை உருவாகி உள்ளதால், தனித்து விடப்பட்டுள்ள
கட்சிகள், முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்புக்கு, ஜெயலலிதா வந்தார். அதன்பின், அவருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும் இடையில் தான், அரசியல் போட்டி நிலவி வந்தது.

இங்கு, நிறைய கட்சிகள் இருந்தாலும், அவை, அ.தி.மு.க., அல்லது தி.மு.க., கூட்டணியில் தான், இடம் பெற்று வந்தன. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன.இவ்விரு கட்சிகளும், அதன் தலைவர்களும், தமிழக அரசியலில், அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தனர். அவர்கள் இருவரும் மறைந்த நிலையில், மக்கள் செல்வாக்கு பெற்ற, தலைவர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், இரண்டாக பிளவுபட்ட, அ.தி.மு.க., மீண்டும்

இணைந்தது. ஆனால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, இரட்டை தலைமை இருப்பதால், எந்த முடிவும் எடுக்க முடியாமல், கட்சி தடுமாறி வருகிறது. முதல்வர் மற்றும் துணை முதல்வர், பா.ஜ.,விற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இணைய, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்வமாக உள்ளன.

அ.தி.மு.க.,விலிருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், தனிக்கட்சி துவக்கி உள்ளார். அவர், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, ஆர்வம் காட்டி வருகிறார். பா.ம.க., - தே.மு.தி.க., - நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள், எந்தமுடிவும் எடுக்காமல் உள்ளன. புதிதாக கட்சி துவங்க உள்ள ரஜினி,

அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதும் புரியாத புதிராக உள்ளது.

தமிழகத்தில், இதுவரை நடந்த தேர்தல்களில், கூட்டணியை முடிவு செய்யும் தலைவர்களாக, ஜெ.,வும், கருணாநிதியும் திகழ்ந்தனர்.தற்போது, நிலைமை மாறி உள்ளது. பா.ஜ., முடிவை பொறுத்து, கூட்டணிகள் மாறும் சூழல் உருவாகி உள்ளது.கருணாநிதி மறைவுக்கு முன் வரை, அ.தி.மு.க., - பா.ஜ., - ரஜினி கூட்டணி அமையும் என்ற பேச்சு இருந்தது. தற்போது, நிலைமை மாறி உள்ளது. பா.ஜ.,வின் பார்வை, தி.மு.க., பக்கமும் திரும்பி உள்ளது.

கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த, பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் வந்தனர்.கருணாநிதி, எம்.பி.,யாக இல்லாதபோதும், லோக்சபாவில், அவரின்


மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சபையை ஒத்தி வைத்தனர். அவர்கள் அளித்த ஆதரவு, தி.மு.க.,வினரை நெகிழ வைத்துள்ளது.

அதேபோல, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், டில்லி சென்று அஞ்சலி செலுத்தினர். இவ்விரு கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கம், காங்கிரஸ், அ.தி.மு.க., மற்றும் பிற கட்சிகளிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்தால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஏற்படும்.அதில், பிற கட்சிகள் இணையக் கூடும். பா.ஜ., - தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால், மற்ற கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணியை உருவாக்கலாம். ஏனெனில், எந்தக்கட்சிக்கும், தனித்து நின்று, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை.எனவே, தேர்தலில் கூட்டணி நிச்சயம். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நிலைப்பாடு தெரியாததால், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என தெரியாமல், தனித்து விடப்பட்ட கட்சிகள், திணறி வருகின்றன.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-201823:51:04 IST Report Abuse

Pugazh Vபீஜேபீ வாசகர்கள் முதலில் சபை நாகரிகம் கற்றுக் கொள்ளுங்கள்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-201822:33:04 IST Report Abuse

Pugazh Vமரியாதை கற்று கொள்ளுங்கள். நன்றி

Rate this:
D.RAMIAH - RAIPUR,இந்தியா
19-ஆக-201818:59:13 IST Report Abuse

D.RAMIAHஎது எப்படி இருந்தாலும் எங்கள் தலைவர் வை.கோவுடன் யார் கூட்டனி வைக்கிறார்களோ அவர்கள் தான் பிரதமர் ஆவார்கள் இதுதான் உண்மை

Rate this:
Manian - Chennai,இந்தியா
20-ஆக-201800:23:29 IST Report Abuse

Manianதொளபதியை முதல் ஆககாவிடடாl, போராட்டம் வெடிக்கு,. இந்தியாவையே அழிக்காமல் விடமாட்டேன் (ரொம்ப நாளாகும், ஊர் ஊரா பொய் தீவைக்கணும், அவனுக நம்மை கொல்லாமல் இருக்கணும், கொஞ்ச காலம் ஆகும்.பரவாயில்லை...

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X