'நீதியின் கையில் உள்ள சாட்டை உடைந்துவிட்டது Dinamalar
பதிவு செய்த நாள் :
'நீதியின் கையில் உள்ள
சாட்டை உடைந்துவிட்டது

புதுடில்லி:ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக் கான நலத்திட்டங்களை நிறைவேற்ற குழு அமைப்பது தொடர்பாக, கட்டாய உத்தரவு பிறப்பிப்பதில், நீதிமன்றத்துக்கு சில கட்டுப் பாடுகள் இருப்பதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி, எம்.பி.லோக்கூர், கருத்து தெரிவித்துள்ளார்.

  'நீதியின், கையில், உள்ள, சாட்டை, உடைந்து,விட்டது


நகர்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உறைவிட வசதிகள் செய்ய, 'தீன்தயாள் அந்தியோதயா யோஜனா' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.இந்த

திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகள் குழு அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பல மாநிலங்களில், இத்திட்டத்தை நிறை வேற்றுவது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.


இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதி, எம்.பி.லோக்கூர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''பொது நல வழக்குகளை விசாரிக்கும் போது, மத்திய அரசுக்கு எதிராக, கடுமையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது; இது, நாட்டின்
பிறபிரச்னைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது,'' என்றார்.


மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 'ஆட்சி தொடர்பான விஷயங்களில் இருந்து, நீதித்துறை சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். ஆட்சி குறித்த

Advertisement

முடிவுகளை, ஆள்பவர்கள் தான் எடுக்க வேண்டும்' என,சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி, எம்.பி. லோக்கூர் கூறுகையில், ''இதுபோன்ற வழக்கு களில், சில கட்டாய உத்தரவுகள் பிறப்பிப் பதில், நீதிமன்றங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. நீதித்துறையின் கையில் உள்ள சாட்டை உடைந்து விட்டது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
19-ஆக-201821:16:43 IST Report Abuse

தமிழர்நீதி நீதிமன்றத்திடம் இருக்கவேண்டியா சாட்டையை குற்றவாளிகள் காவிகள் புடுங்கி வைத்துக்கொண்டு நீதியை தாக்குகிறார்கள் . வன்முறை மிரட்டுகிறது . நீதி கண்ணீர் சிந்துது .

Rate this:
Ram -  ( Posted via: Dinamalar Android App )
19-ஆக-201818:54:50 IST Report Abuse

Ramமாநில சுய ஆட்ச்சியை விறிவு படுத்தி மக்கள் நல திட்டங்கள் வகுப்பதில் அவைகளுக்கு பண வசதிகளை ஏற்ப்படுத்தித்தர வேண்டும். இது போன்ற வாயில் நுழையாத பெய்ரகளில் திட்டம் திணிக்கப்படுவதால் தான் பல மாநில அரசுகள் செயல்படுத்த முன்வருவதில்லை. ஆழ்ந்து யோஷிக்க வேண்டிய விஷயம்.

Rate this:
Ram -  ( Posted via: Dinamalar Android App )
19-ஆக-201818:54:48 IST Report Abuse

Ramமாநில சுய ஆட்ச்சியை விறிவு படுத்தி மக்கள் நல திட்டங்கள் வகுப்பதில் அவைகளுக்கு பண வசதிகளை ஏற்ப்படுத்தித்தர வேண்டும். இது போன்ற வாயில் நுழையாத பெய்ரகளில் திட்டம் திணிக்கப்படுவதால் தான் பல மாநில அரசுகள் செயல்படுத்த முன்வருவதில்லை. ஆழ்ந்து யோஷிக்க வேண்டிய விஷயம்.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X