கேரளாவுக்கு கை கொடுங்கள் ஸ்டாலின் வேண்டுகோள் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கேரளாவுக்கு கை கொடுங்கள்
ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:'இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும், கேரள அரசுக்கு தேவையான, நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

 கேரளாவுக்கு, கை கொடுங்கள், ஸ்டாலின், வேண்டுகோள்


அவரது நேற்றைய அறிக்கை:கேரளாவில் ஏற்பட்டுள்ள, இயற்கை பேரிடரில், 324

பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பேரழிவில் ஏற்பட்டுள்ள சேதங்களின் பட்டியல், நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி, பெருந்துயரத்தில்சிக்கி தவிக்கும், கேரள மக்களுக்கு, நேசக்கரம் நீட்டி, அவர்களை மீட்க, மத்திய அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும்.


கேரள அரசுக்கு தேவையான, நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும்,நிவாரண மற்றும்நிதியுதவி களையும்,தாராளமாக வழங்க,தமிழக அரசு முன்வர வேண்டும்.வீடுகளை இழந்த மக்களை, நிவாரண முகாம்களில் தங்க வைத்து, கேரளஅரசு, தேவை யான உதவிகளை செய்து வருகிறது. இப்பணியில், தி.மு.க.,வும் பங்கேற்க வேண்டும்.


எனவே, மாவட்ட செயலர்கள் அனைவரும், கட்சியினரிடமும், உதவி செய்ய முன்வரும்

Advertisement

பொது மக்களிடமும், போதிய உணவு பொருட் கள், துணிமணிகள் உள்ளிட்ட, அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களை சேகரித்து, கேரள மாநிலத்தில் உள்ள, கட்சி நிர்வாகிகள் வழியே, அம்மாநில மக்களுக்கு அளிக்க வேண்டும்.அந்த விபரங்களை, தலைமைக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-201823:58:18 IST Report Abuse

Pugazh Vஎந்த அரசியல் கட்சியிடமிருந்தும் இப்படி உதவி மனப்பான்மை கொண்ட வேண்டுகோள் விடுக்கப்படவில்லை. அது ஏன் என்று யோசிக்க தோன்றவில்லை.. ஸ்டாலினை விமர்சிக்க வந்து விட்டார்கள்.

Rate this:
bal - chennai,இந்தியா
19-ஆக-201822:21:24 IST Report Abuse

balசென்னை வெள்ளத்தில் சிக்கியபோது இந்த திராவிட கட்சிகள் அமளி பண்ணியது... வசூலில்....அதுபோல செய்யாமல் இருந்தால் போதும்.

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
19-ஆக-201818:15:44 IST Report Abuse

தமிழ் மைந்தன் நீங்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும் எல்லாம் அரசு பார்த்து கொள்ளும். இடையில் நீங்க வசூலில் இறங்காமல் இருந்தா சரி

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X