அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி

Added : ஆக 19, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வு தொடர்பான கற்பித்தல் பயிற்சி, சென்னையில், நாளை துவங்குகிறது.

இலவச பயிற்சி : பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் சிறப்பு பயிற்சி பெற்று விடுகின்றனர்.ஆனால், அரசு பள்ளி மாணவர்களால், லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, தனியாரிடம் பயிற்சி பெற முடியாது.எனவே, அரசு பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 முடித்த பின், மருத்துவ கல்வியில் சேர்வதற்கு, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம், 2017ல் துவக்கப்பட்டது.இந்த ஆண்டு, அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், முன்னதாகவே, நீட் பயிற்சியை துவங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

மண்டல வாரியாக மையம் ; முதற்கட்டமாக, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள, சைதன்யா உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் வழியாக, தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, நீட் தேர்வு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை, சத்யபாமா பல்கலையில், நாளை துவங்கி வைக்கிறார்.முதற்கட்டமாக, 20 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது.பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு சென்று, மண்டல வாரியாக அமைக்கப்படும், நீட் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S VENKATESAN - MADURAI,இந்தியா
19-ஆக-201813:21:13 IST Report Abuse
S VENKATESAN +1, +2க்கு இப்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாட புத்தகங்கள் பற்றிய போதிய அறிவும், கற்பித்தல் பயிற்சியும் இல்லாமல் பாட புத்தகத்தை வாசித்துவிட்டு போகிறார்கள் ஆசிரியர்கள். முதலில் பாடத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில் நடத்துகிறார்களா என்று பள்ளி கல்வி துறை கண்காணித்து புதிய பாடத்திட்டத்தை நடத்த தெரியாத ஆசிரியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பிவிட்டு புதிய திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
19-ஆக-201812:19:59 IST Report Abuse
sumutha - chennai மிக மிக மிக நல்ல விஷயம் யாருக்கு தெரியுமா பள்ளி வகுப்புகளில் பாடங்களை லேசாக தொட்டு நடத்திவிட்டு உபரி வருமானம் கொட்டும் காலையிலும் மாலையிலும் வீட்டில் டியூஷன் எடுக்கும் அனைத்து மிகவும் மதிப்பிற்குரிய ஆசிரி(றி)ய பெருந்தகைகளுக்கு. மேலும் ஒரு சிறந்த வருமானமீட்ட வழிவகுத்து கொடுத்த அரசுக்கு உங்களின் நன்றிகளை மறக்காமல் தெரிவித்து கொள்ளுங்கள். எதிர் வரும் காலங்களில் மற்ற மாநிலத்து மக்களுக்கு மிகச்சிறந்த போட்டியாளர்களாகவும் மிக சிறந்த வெற்றிகளை பெறவும் மாணவ மாணவி குழந்தைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஆக-201810:35:14 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லது... ஆனால் வாத்தியார்கள் அதை காசு வாங்கிக்கொண்டு டூஷனாக வீட்டில் நடத்தக்கூடாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X