ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற கேரள அமைச்சருக்கு, 'வேட்டு'| Dinamalar

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற கேரள அமைச்சருக்கு, 'வேட்டு'

Added : ஆக 20, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஜெர்மனிக்கு, சுற்றுலா, சென்ற ,கேரள, அமைச்சருக்கு,வேட்டு

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் முழுவதும், வெள்ளத்தில் தத்தளிக்கும் நேரத்தில், அம்மாநில வனத்துறை அமைச்சர், ராஜு, ஜெர்மனி சென்றிருப்பது, கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதிருப்தி


கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, ராஜு, வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடக்கும், சர்வதேச மலையாளிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமைச்சர் ராஜு, சமீபத்தில் சென்றார்.

கேரள மாநிலம் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நேரத்தில், அமைச்சர் ஜெர்மனிக்கு சென்றது, கட்சி மேலிடத்திலும், மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, அமைச்சர் ராஜு, உடனடியாக கேரளா திரும்ப முடிவு செய்திருப்பதாக, அவரது தனிச் செயலர் தெரிவித்தார்.


ஒத்தி வைப்பு


அவர் கேரளா திரும்பியதும், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.முதல்வர், பினராயி விஜயன், மருத்துவ சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார்.மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக, அவர், தன் பயண திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
24-ஆக-201818:13:15 IST Report Abuse
kundalakesi எப்படியும் கொம்மீஸ்த்தானே , தர்ம பிண்டம், உண்டி காசு தேர்த்திடுவாரு.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஆக-201817:20:49 IST Report Abuse
Nallavan Nallavan மீடியாக்களில் நம்முடைய தெர்மாகோல் மந்தி ரி, எப்படி படாதபாடு பட்டாரோ அதே போல இவரையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் .... இல்லாவிட்டால் இந்த நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார்கள் "கொள்கைப்பிடிப்புள்ள" இடதுசாரிகள் .... இன்னும் கிளியர் கட்டாச் சொல்லணும்ன்னா பிரியாணி கடையை சொடலை போயிப் பார்த்து ஆறுதல் சொன்னமேறி ....
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
20-ஆக-201810:41:26 IST Report Abuse
Muthukrishnan,Ram தன் நாடும், நாட்டு மக்களும் உயிரை இழந்து, உடமையிழந்து தவிக்கும் நேரத்தில் இந்த மலையாளிகளுக்கு மாநாடு தேவையா??? இதை தான் படித்த புத்திசாலி என்பதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X