ஸ்டெர்லைட் ஆலை: ஆய்வு செய்யகுழு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை: ஆய்வு செய்யகுழு

Added : ஆக 21, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Sterlite plant, Tuticorin Sterlite plant, National Green Tribunal,ஸ்டெர்லைட் ஆலை, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தேசிய பசுமை தீர்ப்பாயம் , வேதாந்தா நிறுவனம், நீதிபதி ஏகே கோயல் , மாசு கட்டுப்பாடு வாரியம், ஸ்டெர்லைட், 
 Vedanta Company, Justice AK Goel, Pollution Control Board, Sterlite,

புதுடில்லி; 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்' என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதை எதிர்த்து, ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதாகவும், ஆலை உற்பத்தியால் மாசு உண்டாவதாக கூறப்படும் வாதத்தை ஆராய, குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.'வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு வாதிட்டது.ஆனால், தமிழக அரசின் வாதத்தை, தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, 'ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்' என்ற, வேதாந்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது.இந்த விசாரணை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி, ஏ.கே.கோயல் தலைமையில், கடந்த வாரம் நடந்தது.அப்போது, 'ஊழியர்கள்சம்பளம் உட்பட பல்வேறு நிர்வாக பணிகளை கவனிக்க வேண்டி இருப்பதால், ஆலையை, 30 நாட்களுக்கு திறக்க அனுமதிக்க வேண்டும்' என, வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.இதற்கு, தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'ஆலையை திறக்க அனுமதி அளித்தால், விதிமீறல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை, வேதாந்தா நிறுவனம் அழித்துவிடக் கூடும்' என, அரசு சார்பில் வாதிடப்பட்டது.நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும், ஆலையை திறக்க, நீதிபதி அனுமதி அளித்தார். அதே சமயம், ஆலையில் உற்பத்தி நடக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.இந்நிலையில், இந்த வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி உத்தரவிட்டதாவது:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். மேலும், இந்த குழு, ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
21-ஆக-201818:04:32 IST Report Abuse
jagan லோக்கல் தேர்தல் வச்சு முடிவு செய்யலாம் , அமெரிக்காவில் செய்வது போல்
Rate this:
Share this comment
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
21-ஆக-201818:02:26 IST Report Abuse
GOPALASAMY காப்பர் ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் . சீனாவிலிருந்து அதிக விலை கொடுத்து காப்பர் வாங்கி, சீனாவின் முன்னேற்றத்திற்கு வாருங்களே . உழைப்போம் . வாருங்கள் தோழர்களே
Rate this:
Share this comment
Cancel
PERUMAL - cochin,இந்தியா
21-ஆக-201817:55:10 IST Report Abuse
PERUMAL ஆலையை திறப்பதற்கு முன் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X