தி.மு.க.,வில் ஸ்டாலின் - அழகிரி பகிரங்க மோதல் வெடிக்கிறது ! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க.,ஸ்டாலின்,அழகிரி,பகிரங்க மோதல்,வெடிக்கிறது!,
கட்சி,கைப்பற்ற, இரு தரப்பிலும், அதிரடி, வியூகம்

தி.மு.க.,வில், ஸ்டாலின் - அழகிரி இடையே, பகிரங்க மோதல் வெடித்துள்ளது. கட்சியை கைப்பற்ற, இரு தரப்பிலும், அதிரடி வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. கட்சியின் பொது குழுவை, வரும், 28ல், சென்னையில் கூட்ட, ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள நிலையில், 24ம் தேதி, மதுரையில், ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து,
அழகிரி முடிவெடுக்கிறார்.
கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, 2014ல், கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அதன்பின், அவர் மீண்டும் சேர்க்கப்பட வில்லை. அழகிரி இணைப்பு விவகாரம், அவ்வப்போது, தி.மு.க.,வில் எழும். அவரது தம்பியும், செயல் தலைவருமான ஸ்டாலினின் கடும் எதிர்ப்பு காரணமாக, அப்பேச்சு அப்படியே முறிந்து விடும்.

காப்பாற்ற முயற்சி


கருணாநிதி, இயங்கும் நிலையில் இருந்தபோதும் சரி; இயங்க முடியாத நிலைக்கு ஆளான பிறகும் சரி, அழகிரியால் மீண்டும், தி.மு.க.,வுக்குள் நுழைய முடியவில்லை.இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 7ம் தேதி, மரணம் அடைந்தார். 8ம் தேதி, சென்னை, மெரினாவில், அண்ணாதுரை நினைவிட வளாகத்தில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 10ம் தேதியன்று, அழகிரி விவகாரம் மீண்டும் கிளப்பப்பட்டது. அவரை மீண்டும் சேர்த்து, குடும்பமும், கட்சியும் உடையாமல் காப்பாற்ற, உறவினர்கள் சிலர் முயற்சி எடுத்தனர்.

அந்த முயற்சி, ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்கவில்லை. ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும், அழகிரி இணைப்பை அடியோடு புறக்கணித்ததால், சமரசம் பேசிய சொந்தங்களும் ஒதுங்கின.இதனால், அதிருப்தி அடைந்த அழகிரி, தன் குடும்பத்தினருடன் சென்று, கருணாநிதி சமாதியில், ஆதங்கத்தை கொட்டினார். கருணாநிதி மறைவுக்கு பின், ஒரு வாரமாக காத்த மவுனத்தை கலைத்தார். 'தி.மு.க.,வின் உண்மையான தொண்டர்கள், என் பக்கம் தான் உள்ளனர்'
என பேசி, அதிரடியை கிளப்பினார்.

புகார் பட்டியல்


அதோடு நிற்காமல், கட்சி

பணத்தில் முறைகேடு நடப்பதாகவும், பதவிகள் விற்கப்படுவதாகவும், ஸ்டாலின் தலைமைக்கு எதிராக, புகார் பட்டியல் வாசித்தார். இதனால், அழகிரி - ஸ்டாலின் இடையிலான பகை, மீண்டும் புகைவிட துவங்கியது.சுதாரித்த ஸ்டாலின், அவசர செயற்குழுவை, சென்னையில் கூட்டினார். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவே, இந்த கூட்டம் என அறிவிக்கப்பட்டாலும், அதில் பங்கேற்ற எல்லாருமே, ஸ்டாலின் தலைமைக்கு ஆதரவாகவும், அழகிரி இணைப்புக்கு எதிராகவுமே பேசினர். அதோடில்லாமல், அழகிரிக்கு பதிலடி தரும் விதமாக, பத்திரிகைகளிலும் சிலர் கருத்துகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அழகிரி தன் பலத்தையும், செல்வாக்கையும் காட்ட, சென்னையில் தனி இரங்கல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம், 5ம் தேதி, கருணாநிதி மறைவின், 30வது நாளையொட்டி, அமைதி பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். தி.மு.க.,வில், அதற்கான ஆதரவு திரட்டும் வேலை துவங்கியதை அறிந்ததும், அதற்கு முன்பாகவே, தலைவர் நாற்காலியில் உட்கார்ந்து விடுவது என்ற, முடிவுக்கு வந்தார், ஸ்டாலின்.

நேற்று முன்தினம் இரவு, திடீர் அறிவிப்பாக, கட்சியின் உயர்மட்ட அமைப்பான, பொதுக்குழு, வரும்,28ல் கூடுவதாகவும், அதில், புதிய தலைவர், பொருளாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும், அறிவாலயத்தில் இருந்து அறிக்கை வெளியானது. நேற்று காலையில், கட்சித் தலைவர், பொருளாளர் தேர்தலில் போட்டியிட, ஒருநாள் மட்டும் அவகாசம் அளித்து, 26ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஸ்டாலின், மிக வேகமாக

காய் நகர்த்துவதை பார்த்ததும், அழகிரியும், அடுத்தகட்டத்துக்கு தாவினார். வரும், 24ல், மதுரை, டி.வி.எஸ்., நகரில் உள்ள தயா திருமண மண்டபத்தில், ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில், ஸ்டாலினை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதா அல்லது ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க.,வுக்கு எதிராக, போட்டி இயக்கம் நடத்துவதா என்பது பற்றி விவாதிக்கிறார்.

இதற்கிடையில், தனியார், 'டிவி'க்கு, கருணாநிதி மகள் செல்வி அளித்த பேட்டியில், 'குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்; எந்த சூழ்நிலையிலும் பிரிந்து விடக் கூடாது என்று, என் தந்தையும், அவரது சகோதரியான, என் அத்தையும் அடிக்கடி கூறுவர்' என, குறிப்பிட்டுள்ளார்.கருணாநிதி மறைந்து இன்று, 16வது நாள். சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில், 16வது நாள் காரியம் நடக்கிறது. அதையொட்டி, குடும்பத்தினர் மீண்டும் கூடுகின்றனர். இதில், பங்கேற்பதற்காக, அழகிரியும், சென்னையில் தங்கியிருக்கிறார்.

தலைவர் தேர்தல் ரூ.25 ஆயிரம் கட்டணம்!


தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., தேர்தலில், தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள, தகுதியுள்ள ஒன்றிய, நகர, பகுதி செயலர்கள்,மாவட்ட, மாநகர செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய, பொதுக்குழுக் கூட்டம், வரும், 28ல், சென்னை, அறிவாலயத்தில் நடக்கிறது.

அதில், தலைவர், பொருளாளர் தேர்தல்

நடைபெறும். இந்த பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்புவோரிடம், வேட்புமனுக்கள், 26ம் தேதி காலை, 10:00 முதல், 4:00 மணி வரையில், அறிவாலயத்தில் பெற்றுக் கொள்ளப்படும். 27ம் தேதி பிற்பகல், 1:30 மணிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம். மாலை, 5:00 மணி அளவில், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.
இப்பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், பொறுப்பு ஒன்றுக்கு, வேட்புமனு கட்டணமாக, 25
ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'கருணாநிதி நினைத்ததை நான் செய்து முடிப்பேன்!'


சென்னையில், அழகிரி அளித்த பேட்டி:தி.மு.க., பொதுக்குழு கூடுவது பற்றி, எனக்குத் தெரியாது. கருணாநிதி நினைவிடத்தில், ஏற்கனவே, என் ஆதங்கத்தை தெரிவித்து விட்டேன். விரைவில், பத்திரிகையாளர்களிடமும், ஆதங்கத்தை தெரிவிப்பேன். செப்., 5ல், அமைதிப் பேரணி நடக்கிறது. அதில், ஒரு லட்சம் பேர் பங்கேற்பர்.கருணாநிதியின் உண்மை தொண்டர்கள், என் பக்கம் உள்ளனர் என்பதை, அமைதி பேரணியில் நிரூபிப்பேன். எதிர்காலத்திலும், என் பலத்தை நிரூபித்து காட்டுவேன்.

என்னை, பின்னால் இருந்து, பா.ஜ., இயக்குகிறது என்ற குற்றச்சாட்டில், எள்ளளவும் உண்மையில்லை. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள், தொண்டர்கள், என் பக்கம் உள்ளனர். ரஜினி, இன்னும் கட்சி துவங்கவில்லை. எனவே, அவருடன் இணைந்து செயல்படுவது பற்றி, எப்படி தெரிவிக்க முடியும்?

அரசியலில், பின்னால் நடப்பதை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. தனிக் கட்சி துவக்குவது பற்றியும், சிலர் கேட்கின்றனர். என்னிடம் கடைசியாக, கருணாநிதி தெரிவித்த வார்த்தைகள், நெஞ்சில் பசுமையாக பதிந்துள்ளன. அது என்ன என்பதை, வெளியில் தெரிவிக்க முடியாது. அவர் நினைத்த காரியத்தை, நான் செய்து முடிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஆக-201814:06:07 IST Report Abuse

Malick Rajaதிமுக ஒரு கட்சி அதற்க்கு கொள்கை கோட்பாடுகள் .. செயற்குழு . பொதுகுழு என்றெல்லாம் இருக்கிறது . இது சங்கரமடம் அல்ல .. செயற்குழு கூடிவிட்டது அழகிரியை பற்றி யாரும் பேசவே இல்லை .. பொதுக்குழு கூடும் அழகிரியை யாரும் ஒரு பொருட்டாகவே எடுக்கமாட்டார்கள் .. எனவே வெடிப்பது எறிவது ..சொதப்புவது போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத வார்த்தைகள் திமுக என்ற இயக்கத்துக்கு பொருந்தாது யாருவேனுமானாலும் திமுகவிலிருந்த்து போகலாம் . ஆனால் கட்சி இருக்கும் மிகவலிமையாகவே . திமுகவை பற்றி தெரியாமல் உளறினால் அதற்க்கு உளறுபவர்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியும் .. எனவே உடன் விடும் வேலைகள் திமுகவில் எடுபட்டதில்லை எடுபடாது

Rate this:
GOPALASAMY - bengaluru,இந்தியா
22-ஆக-201818:45:02 IST Report Abuse

GOPALASAMY குஷ்பூவிற்கு நல்லொதொரு பதவி கொடுக்கவும் .அவர் ராகுல்ஜிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல் படுவார் .

Rate this:
Rajasekar K D - Kudanthai,இந்தியா
27-ஆக-201817:21:24 IST Report Abuse

Rajasekar K Dதங்கள் இனத்திலிருந்து யாரவது அனுப்பினால் இன்னும் நன்னா செய்வா...

Rate this:
22-ஆக-201818:36:55 IST Report Abuse

கணபதிதுர்க்கா. தலைவி செல்வி. பொதுச்செயலாளர் கனிமொழி. பொருளாளர் எப்படி என் தேர்வு. மற்ற எல்லோருக்கும் வாயில் விரல்.

Rate this:
மேலும் 126 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X