பொய் தகவல்: வாட்ஸ் ஆப்பிற்கு மத்திய அரசு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொய் தகவல்: வாட்ஸ் ஆப்பிற்கு மத்திய அரசு உத்தரவு

Added : ஆக 22, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
WhatsApp,வாட்ஸ் அப்,மத்திய அரசு

புதுடில்லி : பொய் தகவல்களின் துவக்கம் எங்கு நிகழ்கிறது என்பதுகுறித்து ஆய்வு செய்யும்படி, 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தை, மத்திய அரசு கேட்டுள்ளது.

'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் பரவிய, வாட்ஸ் ஆப் தகவல்களை நம்பி, வன்முறை கும்பல்களால் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இதையடுத்து, பொய் தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப்பிற்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.அதன்படி, தகவல்கள் அதிகளவில் பரப்பப்படு வதை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை, வாட்ஸ் ஆப் விதித்துள்ளது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் பொய் தகவல்களின் துவக்கத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்த வருமான, ரவிசங்கர் பிரசாத், டில்லியில் நேற்று கூறியதாவது:

நம் நாட்டின் டிஜிட்டல் துறை வளர்ச்சிக்கு, வாட்ஸ் ஆப், குறிப்பிடத்தக்க வகையில் உதவியுள்ளது. அதேசமயம், கும்பல்களால் கொலை செய்யப்படுதல், பாலியல் ரீதியில் பழிவாங்குதல் போன்றவற்றை தடுப்பதற்கான வழிகள் கண்டறியப்பட வேண்டும்.இதுதொடர்பாக, வாட்ஸ் ஆப் தலைமை நிர்வாகி, கிறிஸ் டேனியல்ஸை சந்தித்து பேசினேன். வாட்ஸ் ஆப்பில், பொய் தகவல்கள் பரப்பப்பட்டால், அவற்றின் துவக்கத்தை கண்டறிய, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
22-ஆக-201814:03:09 IST Report Abuse
Visu Iyer வாட்ஸ் அப் போலவே பல இருக்கிறதே.. ஏன் வாட்ஸ் அப் பற்றி மட்டும் சொல்றாங்க... வாட்ஸ் அப் பை reliance கம்பெனி மாதிரி பெரிய கம்பெனி வாங்க போகுதா... அல்லது அது மாதிரி ஒன்னை தொடங்க போகுதா...?
Rate this:
Share this comment
Cancel
22-ஆக-201813:45:58 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாட்சப் தன் கொள்கையை மாற்ற வேண்டும் ( end to end encryption ) இல்லையென்றால் இதை இந்தியாவில் தடை செய்யவேண்டும். தீவிரவாதிகளும் , சமூக விரோதிகளும் இந்த வசதியை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
22-ஆக-201813:06:44 IST Report Abuse
Kuppuswamykesavan /////BoochiMarunthu - Paradise papers,பனாமா 22-ஆக்-2018 01:49 புது ருபாய் நோட்டில் gps சிப் உள்ளது , அது 100 அடி ஆழத்தில் இருந்தாலும் தெரிந்து விடும் என்று புரளி கிளப்பியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா ?................ Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர் 22-ஆக்-2018 01:49 புரளியை நம்பித்தான் நாங்கள் பதுக்கவில்லை என்று சொல்கிறாயா?.///// - ஆக ஒரு உண்மை வெளியே வந்துவிட்டது தானே?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X