கேரள வெள்ள நிவாரண நிதியில் மோசடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரள வெள்ள நிவாரண நிதியில் மோசடி

Updated : ஆக 22, 2018 | Added : ஆக 22, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கேரளா, முதல்வர் பேரிடர் நிவாரண நிதி, மோசடி

கோழிக்கோடு : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியும், அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. பலரும், தங்களது சிறு சேமிப்பு தொகைகளை கேரளாவுக்கு நிவாரணமாக அளித்து வரும் நெகிழ்ச்சியான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் இந்த துயர சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடியும் நடந்து வருகிறது. முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப விரும்புவோர் அதற்காக கேரள அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமே வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் தனிநபரின் வங்கி கணக்கு எண்களை கொடுத்து அதற்கு பணம் அனுப்பும்படி தகவலை பரப்பி உள்ளனர். பெரும்பாலும் வாட்ஸ்ஆப் மூலம் இந்த தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருவனந்தபுரம் சைபர் பிரிவு விசாரணையை துவக்கி உள்ளனர். ஆனால் இந்த தனிநபர் கணக்கிற்கு எத்தனை பேர், எவ்வளவு தொகை அனுப்பினார்கள் என்பது பற்றிய தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தனிநபர் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் படி பகிரப்பட்ட போலி தகவல்களின் ஸ்க்ரீன்ஷாட்களை போலீசார் சேகரித்து, அதை பரப்பியவர்களை தேடி வருகின்றனர். சமீபத்தில், வெள்ளத்தால் முல்லை பெரியாறு அணை சேதமடைந்துள்ளதாக போலியான ஆடியோ தகவல் அனுப்பிய பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஆக-201803:52:32 IST Report Abuse
J.V. Iyer அறுவது வருடமாக இந்திய ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் போய்ச்சேரவேண்டிய பணத்தை கொள்ளையடித்தவர்கள்தான் இதற்கு காரணமாக இருக்கும். ருசி கண்ட பூனை. புறம் கையை நக்காமல் இருக்குமா..
Rate this:
Share this comment
Cancel
22-ஆக-201819:07:57 IST Report Abuse
ஆப்பு சீப் மினிஸ்டர் ஃபண்ட்ல மட்டும் ஊழல் நடக்கப் போவதில்லையா? நாங்க பாக்காத கண்டெயன்ர் லாரி கரன்சி ஊழலா? அப்பிடியே அமுக்கிட்டாங்களே? எல்லாம் ஆத்தோட பொற தண்ணி....ஐயா குடி ...அம்மா குடி தான்.
Rate this:
Share this comment
Cancel
Vandhe Madaram - Karur,இந்தியா
22-ஆக-201818:38:01 IST Report Abuse
Vandhe Madaram ஒரு தனியார் காட்சி ஊடகம் தன்னுடைய நிறுவனம் நடத்தும் அறக்கட்டளை பெயரில் காசோலை, இ-டிரான்ஸ்பர் அனுப்ப 24 மணி நேரம் அதன் திரையில் செய்தி ஓடிக் கொண்டே உள்ளதே. தடுத்து நிறுத்துவார் யாரோ?. பொதுவாக நிறுவனம் பெயருடன் கேரள நிவாரண நிதி என்ற பெயரில் வங்கி கணக்கு துவங்க அரசிடம் அனுமதி பெற்றுதான் செய்ய முடியும். எனவே பொதுமக்கள் உஷாராக இருந்து இது போன்றவர்களை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X