வெள்ள பாதிப்பு: தமிழகம் மீது கேரளா புகார்| Dinamalar

வெள்ள பாதிப்பு: தமிழகம் மீது கேரளா புகார்

Updated : ஆக 23, 2018 | Added : ஆக 23, 2018 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளா, முல்லை பெரியாறு அணை, தமிழகம், இடுக்கி

புதுடில்லி: இடுக்கியில் வெள்ளம் ஏற்பட்டதற்கு, முல்லை பெரியாறு அணையை திடீரென திறந்து விட்டதே காரணம் என கேரள அரசு புகார் கூறியுள்ளது.

கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனையடுத்து அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


பிரமாண பத்திரம்:



இந்த வழக்கில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.அதில், பெரியாறு அணையில் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இடுக்கியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசும் ஒரு காரணம். பெரியாறு அணையில் தண்ணீரை திடீரென திறந்துவிட்டதே பாதிப்பிற்கு காரணம். அணை நீர்மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தமிழகம் ஏற்கவில்லை எனக்கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kovai Subbu - Coimbatore,இந்தியா
24-ஆக-201812:46:33 IST Report Abuse
Kovai Subbu கேரளாவில் பல ஆயிரக்கணக்கான கி.மி. தூரம் சாலைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அவற்றை சரி செய்ய ஜல்லி கற்களும், m-sand ம் தேவை. மேலும் பாதிப்புக்கு உள்ளான பல வீடுகள் சரி செய்ய ஆற்று மணலும் தேவை. சில மாதங்களுக்கு முன் கேரள உயர்நீதி மன்றம் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கல் குவாரிகள் அனைத்தையும் மூட உத்தரவு போட்டுள்ளது. நல்ல காலத்திலேயே கேரளாவில் வீடு கட்ட தமிகத்தில் இருந்து ஆற்று மணல் கடத்தல் செய்யப்படும். இப்போது ஜல்லி கற்களும், m-sand மற்றும் மணல் கடத்தல் தீவிரமாக ஆரம்பிப்பார்கள். கேரளா மக்கள் தங்கள் இயற்கை வளங்களை பாது காத்துக் கொள்வதில் புத்திசாலிகள். அவர்களில் இடத்தில் காசும் அதிகம். அங்கே அநேகமான மக்கள் இரண்டு மாடி ஆடம்பர வீடுகள் காட்டுவார்கள். நம்மவர்கள் காசுக்காக மலைகளையையும், ஆறுகளையும் தோண்டி அள்ளி கொடுத்து விடுவார்கள். இம்முறை தமிழக அரசும் பொது மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவை இருந்தால் அவர்களின் கல் குவாரிகளை திறக்கட்டும், மேலும் மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளட்டும். தமிழகத்தில் இருந்து கடத்தல் செய்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இனிமேலாவது அரசும் பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அரிசி, பால், இறைச்சி, காய்கறிகள், துணிமணிகள் அனுப்புவது கூட ஒரு மனிதாபிமான மற்றும் வியாபார அடிப்படையில் அனுமதிக்கலாம். ஆனால் நமக்கே இல்லாத இயற்கை வளங்களை அங்கே அனுப்புவது நம்மில் சிலர் செய்யும் துரோகம். அதே போல பதிலுக்கு கோழிக்கழிவுகளும், மருத்துவ கழிவுகளையும் தமிழக எல்லையில் கொட்டிவதும் தடுக்கப்பட வேண்டியது.
Rate this:
Share this comment
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
24-ஆக-201800:48:29 IST Report Abuse
Naagarazan Ramaswamy அப்படியானால் கர்நாடகா ளா அரசின்மீது தமிழகமும் ஒரு மனுவை உச்சநீதி மன்றத்தில் அளிக்குமாறு கோருகிறேன். கொள்ளிடம் பாலங்கள் இடிந்ததற்கும் கர்நாடகவே பொறுப்பு அன்று ஆகிறது அல்லவா
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-ஆக-201823:14:28 IST Report Abuse
s t rajan கேரள மக்கள் நமக்கு நன்றிதெரிவிக்கிறார்கள். அங்குள்ள அரசியல் வ்யாதிகளை நாம் கண்டு கொள்ள வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X