தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு

Added : ஆக 24, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: 'லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு, வெற்றி பெறுவோம்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதில், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது, இன்று தன் பிறந்த நாளை ஒட்டி, நேற்று, எம்.ஜி.ஆர்., காது கேளாதோர் பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாயை, விஜயகாந்த் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: அரசியல் என்பது, பொது நலமாக இருக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள், தங்கள் பதவிகளை தக்க வைப்பதில் தான் குறிக்கோளாக இருக்கின்றனர். மக்கள் பிரச்னையில், கவனம் செலுத்துவதில்லை.இவற்றை எல்லாம், எதிர்காலத்தில் தீர்க்கும் முயற்சியில், தே.மு.தி.க., தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். வரும் லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், தே.மு.தி.க., போட்டியிட்டு, வெற்றி பெற்று, மக்களுக்கு உதவிகள் செய்யும். நான் சிகிச்சைக்காக, அமெரிக்கா சென்றபோது, பிரார்த்தனை செய்த, அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimhan - Manama,பஹ்ரைன்
25-ஆக-201821:00:53 IST Report Abuse
Narasimhan கேப்டனை பார்ப்பதற்கு மிகவும் பாவமாக இருக்கிறது. அவர் குடும்பத்தார் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக செயல் பட்டு இருப்பார். அவர் உடல்நிலை இடம் கொடுக்காத பட்சத்தில் அடுத்த தேர்தலில் அதிமுகவை போல் தேமுதிகவும் காணாமல் போகும்
Rate this:
Share this comment
Cancel
karthi - chennai,இந்தியா
25-ஆக-201819:43:06 IST Report Abuse
karthi விஜயகாந்தால் சரியாக பேச கூட முடியவில்லை. அவருக்கு உடலில் பல பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. நமக்கே அவரை பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இவர் மனைவி இவரை முதல்வர் ஆக்க போவதாக சொல்கிறார். இவர் இந்த நிலைமைக்கு ஆளானதே, இவர் மனைவியால் தான் என்று சொல்கிறார்கள். ஏன் இவர் மனைவி இவரை இப்படி கொடுமை படுத்துகிறார் என்று தெரியவில்லை. இவர் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீழ்ந்து போனதற்கு காரணமும் இவர் மனைவியும் அவர் குடும்பமும் தான் காரணம் என்று சொல்கிறார்கள். கடவுள் தான் இவரை காப்பாற்றவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
25-ஆக-201816:32:21 IST Report Abuse
Venkatesh Srinivasa Raghavan எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெரும் அணி மற்றும் இரண்டாவதாக வரும் அணிக்குமான வித்தியாசம் 5 - 7 சதவீதம்தான். தேமுதிக தனியாக நின்ற தேர்தல்களில் 8 - 10 சதவீதம் வரை பெற்றுள்ளது. மறுபடியும் அந்த நிலைக்கு வந்தாலே அது யாருக்கு பாதகமாக இருக்க போகிறது என்று தெரியவில்லை. இவர் தனியாக அடுத்த தேர்தலில் நின்றால் - ஜெயிக்கிறாரோ தோற்கிறாரோ - ஜெயலலிதாவிற்கு பிறகு தைரியமாக அந்த முயற்சியை எடுப்பது இவராகத்தான் இருக்கும். தொடர் தோல்விகளுக்கு பிறகு பாமக கூட திமுகவிடம் கூட்டணிக்கு கெஞ்சும் நிலையில் இருக்கிறது. சீமானை பொறுத்தவரை கிறிஸ்துவ மிஷினரிகளிடம் collection ஏஜென்ட் போல் வேலை செய்து பணம் பார்ப்பவர். விஜயகாந்தை சீமான் அளவிற்கு இறக்கி பார்க்க வேண்டியதில்லை. ஆனால் பெரிய தேர்தல்களில் தேவைப்படும் அளவிற்கு பண பலம் இவரிடம் உள்ளதா என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X