ஏ.பி.எச்.எம்., இணையதளத்தை தாக்கிய கேரள, 'ஹேக்கர்ஸ்'| Dinamalar

ஏ.பி.எச்.எம்., இணையதளத்தை தாக்கிய கேரள, 'ஹேக்கர்ஸ்'

Added : ஆக 25, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ABHM,hacked

புதுடில்லி: அகில பாரதிய ஹிந்து மஹா சபா அமைப்பின் தலைவர், சாமியார் சக்ரபாணியின் சர்ச்சை பேச்சால் ஆத்திரமடைந்த, கேரள மாநில, இணையதள விஷமிகள் நேற்று அந்த அமைப்பின் இணையதளம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சமீபத்தில் பெய்த பலத்த மழையால், கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்திற்கு, பல்வேறு அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. சமீபத்தில், ஏ.பி.எச்.எம்., எனப்படும், அகில பாரதிய ஹிந்து மஹா சபா அமைப்பின் தலைவர், சாமியார் சக்ரபாணி பேசியதாவது: மாட்டிறைச்சியை சாப்பிடாதவர்களுக்கு மட்டுமே ஹிந்துக்கள் உதவ வேண்டும்; பசுக்களை வதைத்ததால் தான், கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு, பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, அகில பாரதிய ஹிந்து மஹா சபா அமைப்பின் இணையதளம் மீது, கேரளாவைச் சேர்ந்த, 'ஹேக்கர்ஸ்' எனப்படும், இணையதள விஷமிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இணையதள முகப்பு பக்கத்தில், மாட்டிறைச்சியை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை, கேரள மாநில ஹேக்கர்ஸ் வழங்கி உள்ளனர். மேலும், 'மனிதர்களை, குணங்களுக்காக மட்டுமே மதிக்கிறோம்; உணவு பழக்க வழக்கங்களுக்காக அல்ல' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஆக-201815:09:16 IST Report Abuse
Pasupathi Subbian உணவை பொறுத்தே குணம் வளரும்.
Rate this:
Share this comment
Cancel
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
25-ஆக-201811:15:09 IST Report Abuse
Rajendran Selvaraj எச்சரிக்கை மனிதர்கள் அதிகம் இருக்கும் இடம் ஜாக்கிரதை - nice movie
Rate this:
Share this comment
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
25-ஆக-201810:47:02 IST Report Abuse
அப்பாவி சரியான பதிலடி தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X