கர்நாடகா அமைச்சர் கடிவாளம்; நிர்மலா சீதாராமன் காட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகா அமைச்சர் கடிவாளம்; நிர்மலா சீதாராமன் காட்டம்

Updated : ஆக 25, 2018 | Added : ஆக 25, 2018 | கருத்துகள் (91)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கர்நாடகா, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், மாநில அமைச்சர், கோபம்

மடிகேரி: நிருபர்கள் கூட்டத்தை விரைவில் முடிக்க கூறிய கர்நாடக அமைச்சருக்கு, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். 'ஒரு மாநில மந்திரி இப்படி செயல்படுவது நம்ப முடியவில்லை' என, அவர் கூறினார்.
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது. இப்பகுதிகளை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார்.

மடிகேரி என்ற இடத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு நிர்மலா பதில் அளித்து கொண்டு இருந்தார். அப்போது மாநில அமைச்சர் ஷாரா மகேஷ், கூட்டத்தை சீக்கிரம் முடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதற்கு நிர்மலா,' இப்பகுதிக்கான பொறுப்பு அமைச்சர் கூறுவது போல் நான் செய்கிறேன். ஒரு மத்திய அமைச்சர், ஒரு மாநில அமைச்சர் சொல்படி கேட்க வேண்டி உள்ளது; நம்ப முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் நான் என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு கூறுங்கள். அதன்படி நான் செய்கிறேன்' என, சத்தம் போட்டு கூறினார்.

அப்போது அருகில் இருந்தவர்கள். பத்திரிகையாளர்களின் கேமராக்களில் அவரது பேச்சு பதிவாவதை சுட்டிக் காட்டினர். அதற்கு நிர்மலா,' அவர்கள் எதை வேண்டும் என்றாலும் பதிவு செய்து கொள்ளட்டும்' என, வேதனையுடன் கூறினார்.



மாநில அமைச்சர் விளக்கம்

கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் நிர்மலா. வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அமைத்து இருந்த நிவாரண முகாம் உள்பட பல முகாம்களை பார்வையிட்டார்.

இது குறித்து மாநில அமைச்சர் மகேஷ் கூறுகையில், '' தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தால், மக்கள் கஷ்டம் அவருக்கு (நிர்மலா) தெரிந்து இருக்கும். வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை செய்ய வேண்டும். அதற்காக, முதலில் அதிகாரிகளை பாருங்கள். அதன் பிறகு பா.ஜ.,வினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை பாருங்கள் என்று தான் அவரிடம் கூறினேன். மத்திய அமைச்சருடன் அதிகாரிகள் எவ்வளவு மணி நேரம் இருக்க முடியும். அவர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள செல்ல வேண்டாமா' என, கேள்வி எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
28-ஆக-201816:05:42 IST Report Abuse
G.Krishnan ஒரு கேபினெட் அமைச்சரை பணி செய்யவிடாது இடைஞ்சல் செய்த அந்த மாநில அமைச்சரமீது வழக்கு பதிய உத்தரவிடவேண்டும். மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகலிருந்து ராணுவம் மூலம் எத்தனை பேர் மீட்கப்பட்டனர். அதில் ராணுவத்தின் பங்கு மகத்தானது. இவர்கள் காட்டும் இடத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும். திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நல்ல படிப்பும் அறிவும் உள்ளது. அவர் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்வார். ஏதோ நிவாரண நிதியை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்க்காகவும் . . . உண்மை நிலவரங்களை பார்க்கக்கூடாது என்பதற்க்காக மாநில அமைச்சர் அவசரப்படுவதாக தோன்றுகிறது . . . . .
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
27-ஆக-201811:49:41 IST Report Abuse
yila ராஜ்யசபாவுக்கே இவ்வளவுன்னா, மக்கள் சபாவுக்கு இருக்காதா?
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
27-ஆக-201801:39:49 IST Report Abuse
Anandan இந்த அம்மாவிற்கு நாகரீகமா பேச தெரியாது அதற்க்கு நல்ல அடி கர்நாடகா அமைச்சர் கொடுத்து இருக்கிறார் ஆனால் திருந்த மாட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X