"Change PM's Name": Arvind Kejriwal On Talk Of Renaming Ramlila Maidan | பா.ஜ.வுக்கு அதிக ஓட்டு கிடைக்க கெஜ்ரிவால் கூறும் யோசனை| Dinamalar

பா.ஜ.வுக்கு அதிக ஓட்டு கிடைக்க கெஜ்ரிவால் கூறும் யோசனை

Added : ஆக 26, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பா.ஜ.வுக்கு, அதிக, ஓட்டு, கிடைக்க, கெஜ்ரிவால், கூறும் யோசனை

புதுடில்லி: பிரதமரின் பெயரை மாற்றினால் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லியில் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தின் பெயரை மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை சூட்ட பா.ஜ. முயற்சித்து வருவதாக செய்திகள் பரவின.இதற்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பதவியேற்றியது, வாஜ்பாயின் பெயரை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த முயற்சி செய்கிறது. ராம்லீலா மைதானத்துக்கு வாஜ்பாயின் பெயரை மாற்றினால் பா.ஜ.க.வுக்கு கூடுதல் ஓட்டு கிடைக்காது. ஒருவேளை பிரதமரின் பெயரை மாற்றினால் கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே பா.ஜ.விற்கு அதிக ஓட்டுகள் தேவையெனில் பிரதமரின் பெயரை மாற்றுங்கள். இவ்வாறு அவர் பதவியேற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
26-ஆக-201816:11:12 IST Report Abuse
madhavan rajan உங்கள் கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆன நிலையில் அதிலிருந்து பலர் வெளியேறுகிறார்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதைத் தடுக்க உங்களுடைய பெயரை மாற்ற வேண்டுமா அல்லது உங்களை தலைவர் பதவியிலிருந்து மாற்றவேண்டுமா என்பதை முதலில் பாருங்கள். மற்ற கட்சிகள் வெற்றிபெற என்ன வழி என்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பதைக் குறைக்க என்ன வழி என்பதையும் பார்த்தால் உங்கள் கட்சிக்கு அசிங்கம் குறையும்.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
26-ஆக-201815:16:45 IST Report Abuse
madhavan rajan இவ்வளவு விவரமாகப் பேசும் இவர் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் இவர் என்ன பெயர் வைத்துக் கொண்டால் மோடியை எதிர்த்து நின்று வெற்றிபெறமுடியும் என்று சரியாக்க கூறி நடத்திக் காட்டிவிட்டால் இவர் கூறுவதை நம்பலாம். இல்லையென்றால் இப்போது பேசியதற்கு ஒரு மன்னிப்பு கடிதம் தயாராக வைத்துக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26-ஆக-201814:31:55 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan டில்லி ஜோக்கர்.வயிற்றெரிச்சலில் உளறுகிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X