குத்துப்பாட்டுன்னா இஷ்டம் : குயிலாய் கூவும் அர்ச்சனா குப்தா| Dinamalar

குத்துப்பாட்டுன்னா இஷ்டம் : குயிலாய் கூவும் அர்ச்சனா குப்தா

Added : ஆக 26, 2018
Advertisement
குத்துப்பாட்டுன்னா இஷ்டம் : குயிலாய் கூவும் அர்ச்சனா குப்தா

உத்தரபிரதேசத்தில் அரும்பிய குறிஞ்சிப்பூ; சென்னையில் மலர்ந்த செவ்வந்திப்பூ; வெள்ளித்திரையில் மின்னும் அல்லிப்பூ; இளையோரை கவர்ந்த மல்லிகைப்பூ; திறமையில் ஒருபோதும் 'வாடா'மல்லிப் பூ; எல்லோருக்கும் கிடைக்காத குங்குமப்பூ, அவர்தான் நடிகை 'அர்ச்சனா குப்தா'. அவர் தினமலர் வாசகர்களுக்காக பேசியது.

* சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்கல்லுாரியில் படிக்கும் போது குறும்படங்கள், பாடல் ஆல்பங்களில் நடித்தேன். இணையதள ரசிகர்களின் வரவேற்பால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

* முதல் படம்கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் பேசுவேன். முதல் வாய்ப்பு தமிழில் 'துப்பாக்கி முனை'படம் . துப்பாக்கி தோட்டா மாதிரி 'ஷார்ப்'பான கேரக்டர். இன்னும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

* நடிப்பு தவிர என்ன தெரியும்நான் ஒரு தொகுப்பாளினியும் தான். பள்ளி, கல்லுாரிகளில் விழா நடந்தால் நான்தான் தொகுத்து வழங்குவேன். அப்புறம் குத்துப்பாட்டுக்கு நன்றாக நடனமாடுவேன். நடனத்தில் சாதிக்க பயிற்சிக்கு போகிறேன்.

* தமிழ் மொழிஅழகான மொழி. நான் பிறந்தது உத்தரபிரதேசம். சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்துட்டேன். தமிழ் கற்றுக் கொண்டு இருக்கிறேன். நாலு வார்த்தை சேர்ந்தாற் போல் தமிழில் பேசினால் குழம்பிடுவேன்.

* தமிழகம் எப்படிஉலகமே அறிந்த மாநிலம். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை. வந்தாரை வாழ வைக்கும் ஊரு. மதுரை, மகாபலிபுரம், சென்னை பெசன்ட் நகர் பீச் எனக்கு பிடிச்ச இடங்கள்.

* பிடித்த உணவுநல்ல வேளை சமைக்க தெரியுமானு நீங்க கேட்கலை. எனக்கு நல்லா சாப்பிட மட்டும்தாங்க தெரியும். தோசை, பொங்கல், இட்லி... ம்... அப்புறம் சட்னி, சாம்பார் பிடித்த அயிட்டங்கள்.

* காதல், கிசுகிசுஐய்யோடா... சத்தியமா கிடையாதுப்பா. என்னோட கனவுகள், ஆசையெல்லாம் சினிமாவில் பெரிய ஆளா வரணுமேங்கிறதுதான்.காதல்... கீதல்... 'கிசுகிசு'வே வேணாம்பா. நல்ல நண்பர்கள் போதும்.

* வீட்ல எப்படிநான், அப்பா அம்மா செல்லம். அதனால் எனக்கும், அண்ணாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். எலியும் பூனையும் மாதிரிதாங்க நாங்க அடிச்சிப்போம்... அப்படியே கொஞ்ச நேரத்தில் சேர்ந்துப்போம்.

* அழகின் மந்திரம்மந்திரமும் இல்ல; தந்திரமும் இல்ல. எட்டு மணி நேர துாக்கம், உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இருந்தால் போதும். நீங்களும் அழகா மாறிடுவீங்க.
இவரை வாழ்த்த archana.g7@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X