1.1 கோடி பெண்களுக்கு ம.பி., முதல்வர் கடிதம்| Dinamalar

1.1 கோடி பெண்களுக்கு ம.பி., முதல்வர் கடிதம்

Added : ஆக 27, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மத்திய பிரதேசம்,  பாஜக, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பெண்கள், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடிதம், தபால்காரர்கள், மபி,மத்திய பிரதேச சட்டசபை தேர்தல், மத்திய பிரதேச பெண்கள், மத்திய பிரதேச தபால்காரர்கள், 
Madhya Pradesh, BJP,Chief Minister Shivraj Singh Chouhan, Women, Chief Minister Shivraj Singh Chouhan letter, Post man, MP, Madhya Pradesh Assembly Election, Madhya Pradesh Women, Madhya Pradesh Post Officers,

போபால்: மத்திய பிரதேச முதல்வரின் செயலால், அந்த மாநிலத்தில் பணியாற்றும் தபால்காரர்கள் திணறி போய் உள்ளனர்.


சட்டசபை தேர்தல் வியூகம்

ம.பி.,யில் 15 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தீவிர பிரசாரத்தில் இறங்க உள்ள முதல்வர் சவுகான், முதல் கட்டமாக ரக்சாபந்தன் விழாவை அதற்காக பயன்படுத்தியுள்ளார்.

ம.பி.,யில் உள்ள 1.1 கோடி பெண்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஆசி வழங்குபடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, 4 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்த செலவை ஏற்றுக் கொள்வதாக மாநில பா.ஜ., அறிவித்துள்ளது.


தற்போது இ - மெயில் காலம். கடிதம் எழுவது குறைந்து விட்டது. இதன் காரணமாக, ம.பி.,யில் தபால்காரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் முதல்வர் சவுகான், 1.1 கோடி பெண்களுக்கு கடிதம் எழுதியுள்ளது, குறைந்த எண்ணிக்கையில் உள்ள தபால்கார்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து பெண்களையும் நேரில் சந்தித்து கடிதத்தை அளிக்க வேண்டும் என தபால் துறை உத்தரவிட்டுள்ளதால், தபால்காரர்கள் திணறி போய் உள்ளனர். இதற்காக, தலா ஆயிரம் கடிதங்களை போடும் அளவுக்கு 4,000 சிறப்பு பைகளையும் தயாரித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
27-ஆக-201820:12:02 IST Report Abuse
ஜெயந்தன் அப்போ..2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உறுதியா...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
27-ஆக-201818:42:13 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லகாலம்... தபால்காரர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால்... புறாக்களின் மூலம் விகிதம் அனுப்பாமல் இருக்கிறாரே...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-ஆக-201817:24:11 IST Report Abuse
இந்தியன் kumar எதை செய்தாலும் அதில் நல்லது கேட்டது உண்டு ஆளும் கட்சி ஆதரிக்கும் எதிர் கட்சி எதிர்க்கும் . இது தான் நிதர்சனம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X