தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்போம்: ஸ்டாலின் சூளுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்போம்: ஸ்டாலின் சூளுரை

Added : ஆக 28, 2018 | கருத்துகள் (211)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
DMKThalaivarStalin,MK Stalin, Duraimurugan, ஸ்டாலின், திமுக பொதுக்குழு, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக , கருணாநிதி,  தமிழகம் திருடர்கள் கையில், முக ஸ்டாலின்,  பொருளாளர் துரைமுருகன், கனிமொழி , DMK,Stalin, DMK General Council, Karunanidhi, Treasurer Duraimurugan, Kanimozhi,

சென்னை: தி.மு.க ., பொதுக்குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் பேசுகையில்; தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்போம் என சூளுரைத்தார். அவர் மேலும் பேசியதாவது:
கருணாநிதி போல் யாராலும் பேச முடியாது. எதையும் எதிர்கொள்ளும் துணிவு உள்ள ஒருவனாக நான் நிற்கிறேன். கருணாநிதியின் கொள்கை தீபம் நமது உயிர்மூச்சு இருக்கும் வரை இருக்கும். இது நமக்கு முப்படை போல் பலத்தை தந்துள்ளது. அனைவரது ஆதரவோடு தலைவராகி இருக்கிறேன்.
எனது தந்தை எனது உழைப்பை பாராட்டியுள்ளார். நானும் அப்படியே வாழ்வேன். என்னை விட எனக்கு கட்சி பெரிது. சின்னம் தான் பெரிது. கறுப்பு சிவப்பு வண்ணமே பெரிது. அன்பழகன் எனக்கு பெரியப்பா போன்றவர். அப்பா இல்லாத குறையை அவர் நிரப்புகிறார்.


மோடி அரசுக்கு பாடம்


தற்போதைய அரசியலில் மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை அடகு வைக்கப்பட்டுள்ளது. கூறு போட்டு கொள்ளை அடிக்கும் அரசு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்பது நமது முதல் கடமையாக இருக்கும்.
கொள்கையே இல்லாத சில கட்சிகள் உள்ளது. தமிழக ஆட்சியை பார்க்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று எண்ண தோன்றுகிறது. அழகான எதிர்காலத்தை கனவு கண்டேன். நாம் , நம்கழகம், நம் தமிழகம், நம்நாடு அனைத்தும் மகிழ்வோடு வாழும் கனவு . மாற்றங்கள் நம்மில் இருந்து துவங்கட்டும்.
இன்று நீங்கள் பார்க்கும் முக ஸ்டாலின் என்ற நான் , புதிதாக பிறக்கிறேன். வேறு ஒரு நான். எனது கனவை மெய்ப்பிக்க கட்சி தொண்டர்கள் இல்லாமல் நான் எதையும் சாதிக்க முடியாது. தமிழகத்தின் கனவை நிறைவேற்ற வாருங்கள். முன்னேற்றம் காண, மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா, மாநில அரசை தூக்கி எறிய வா. நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம். கட்சியே எனது குடும்பம். இவ்வாறு அவர் பேசினார்.


கனிமொழி, துரைமுருகன் பேச்சு


திமுக பொதுக்குழுவில் பொருளாளராக பொறுப்பேற்ற துரைமுருகன், எம்.பி.,கனிமொழி பேசிய போது ஸ்டாலின் கண்ணீர் ததும்ப உணர்ச்சி பொங்குடன் காணப்பட்டார். கனிமொழி பேசியதாவது: எனது தந்தைக்கு எவ்வித ஆசையும் கிடையாது. மெரினாவில் அண்ணாவின் அருகே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் மறைந்த போது அவரது ஆசையை நிறைவேற்றுங்கள் என நா தழு, தழுக்க முதல்வரிடம் கூறினார். ஆனால் சொல்லி விடுகிறேன் என்றார் முதல்வர். காத்து கொண்டிருந்தோம்.

இடம் இல்லை என்ற அறிக்கை இடியாக இறங்கியது. கோபம் உணர்வு வந்தது. மெரினாவில் அமர்ந்து போராடுவோம் என நான் எடுத்து கூறினேன். ஆனால் ஸ்டாலின் கோர்ட்டுக்கு சென்றார். இடம் கிடைத்து விட்டது என்ற தகவல் வந்ததும் ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். அவர் உணர்ச்சி வசப்படவில்லை. அவர் கோபப்படவில்லை. எத்தனை உயிர்களை இழக்க வேண்டியது இருந்திருக்கும். ஸ்டாலின் கண்ணியம் காத்தார். கொள்கைள் மீது நம்பிக்கை கொண்ட ஸ்டாலினை எங்களை வழிநடத்து என வாழ்த்துகிறேன். இவ்வாறு கனிமொழி பேசினார்.


ஸ்டாலின் கொடுத்து வைத்தவர்


திமுகவின் பொருளாளராக பொறுப்பேற்ற துரைமுருகன் பேசுகையில்; இத்தனை காலம் நான் தம்பி என்று தான் அழைத்து வந்துள்ளேன். இன்று முதல் நான் தலைவர் ஸ்டாலின் என அழைக்கிறேன். 1962ல் அரைக்கால் சட்டை பனியன் போட்டு கொண்டு , எங்களை கண்டு பயந்து ஓடுவீர்கள். என் கண் முன்னால் வளர்ந்து என் தலைக்கு மேல் நின்று தலைவனாகி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
தலைவரான தந்தை பொதுசெயலாளராகும் போதும், தலைவராக இருந்தபோதும் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டாலின் பதவியேற்கும் போது எந்தவொரு சலசலப்பும் இல்லை. ஸ்டாலின் கொடுத்து வைத்தவர். நான் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வகித்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையை கருணாநிதி கொடுத்தது போல் ஸ்டாலின் எனக்கு பொருளாளர் பதவி வழங்கியிருக்கிறார். இருப்போர் நிதி தாருங்கள், இல்லாதோர் ஆதரவு தாருங்கள். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (211)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
31-ஆக-201813:29:40 IST Report Abuse
Jaya Ram உத்தமர் தலைவர் சொல்லிவிட்டார் இனிமேல் தமிழ்நாட்டில் காவல் துறை தேவையில்லை ஏன் திருடர்கள் இருந்தால் தானே காவல் தேவை இவர்கள் தான் திருடர்களிடம் இருந்து மீட்டுவிடுவார்களே
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
31-ஆக-201804:47:50 IST Report Abuse
meenakshisundaram indha veenar kulam tamil naattai vittu enru oliyumo?
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
31-ஆக-201804:25:23 IST Report Abuse
Ramasami Venkatesan indha listil maaaji thirudarkalum adankumaa. thirudarkalai piriththu unarndhu neekkuvathu makkal kaiyil.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X