பதவி துறந்த அதிகாரி: பா.ஜ.,வில் ஐக்கியம்| Dinamalar

பதவி துறந்த அதிகாரி: பா.ஜ.,வில் ஐக்கியம்

Added : ஆக 28, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பதவி துறந்த அதிகாரி: பா.ஜ.,வில் ஐக்கியம்


புதுடில்லி, : சத்தீஸ்கரில், நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஓ.பி.சவுதாரி, தன் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தார்.சத்தீஸ்கரில், பா.ஜ.,வை சேர்ந்த, ரமண் சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின், ராய்கர், பஸ்தர், தந்தேவாடா மாவட்டங்களில், நக்சல்கள் ஆதிக்கம் உள்ளது.இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கரை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, ஓ.பி.சவுதாரி, அதே மாநிலத்தில், பணியமர்த்தப்பட்டார். நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை மேற்கொள்ளும் குழுவில் இடம் பெற்றார்.ராய்கர் மாவட்டத்தின், நக்சல் பாதிப்புக்குள்ளான கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் கல்விக்காக, பல திட்டங்களை செயல்படுத்தினார். இதற்காக, 2011 - 12ம் ஆண்டு, காங்., தலைமையிலான, அப்போதைய மத்திய அரசிடமிருந்து, சிறந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கான விருது பெற்றார்.இந்நிலையில், சமீபத்தில், தன் பதவியை ராஜினாமா செய்த, சவுதாரி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.இது குறித்து, ஓ.பி.சவுதாரி கூறியதாவது:என் மாநில மக்களுக்காக நிறைய நன்மை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே செயல்பட முடியும்.எல்லைகளை கடந்து, சத்தீஸ்கர் மாநில மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். அதற்காகவே, அரசியல் களம் புகுந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
29-ஆக-201816:30:03 IST Report Abuse
I love Bharatham வயிரு எரியுதுனு நல்ல தெரியுது ஹசன் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
29-ஆக-201812:59:16 IST Report Abuse
hasan அரசாங்க சம்பளத்தைவிட பி ஜே பி யில் கில்மா நிறைய கிடைக்கும், கூடவே பதவியும் உண்டு, கவர்னராக வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X