chennai | மனநிறைவைத்தரும் புகைப்படக்கலை| Dinamalar

மனநிறைவைத்தரும் புகைப்படக்கலை

Updated : ஆக 29, 2018 | Added : ஆக 29, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மன அழுத்தமான சூழ்நிலையில் இருந்து விடுபட விரும்பினால் நான் கையில் எடுப்பது மருந்து மாத்திரைகள் அல்ல எனது கேமிராவைத்தான்.கேமிராவோடு இரண்டு இடங்களுக்கு சென்று நாலு படங்கள் எடுத்தால் போதும் சந்தோஷமும் மனநிறைவும் கிடைக்கும் என்கிறார் ஆர்.வெங்கடேஸ்வரன்.

சென்னையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் ஒரு தனியார் நிறுவன ஊழியர்.நல்ல புகைப்படங்களின் நீண்ட கால ரசிகர், சம்பந்தப்பட்ட படங்களை எடுத்த புகைப்படக்கலைஞர்களை மனதார பாராட்டி மகிழ்பவர்.

இவரால் பாராட்டப்படும் புகைப்படக்கலைஞர்கள் நன்றியையும் சந்தோஷத்தையும் தெரிவித்துவி்ட்டு, ‛உங்களுக்குள்ளும் ஒரு புகைப்படக்கலைஞர் இருக்கிறார் கேமிரா வாங்கிக்கொண்டு முயற்சியுங்கள்' என்று சொல்லி இவரை உற்சாகப்படு்த்தி இருக்கின்றனர்.

இதன் விளைவு, கடந்த ஒரு வருடத்திற்கு முன் கேமிரா வாங்கிவிட்டார். போட்டோகிராபி சொசைட்டியில் உறுப்பினருமாகிவிட்டார், போட்டோ வாக்கில் கலந்து கொண்டார் இப்படியாக தன்னை புகைப்படக்கலைஞனாக்கி கொண்டார்.

விடாத உழைப்பு மற்றும் அயராத முயற்சி காரணமாக சென்னையில் நடந்துவரும் மெட்ரோ ரயில் கண்காட்சியில் இவரது படங்கள் இடம் பெற்றுள்ளது.

புகைப்படத்துறையில் நான் ஒரு வயது குழந்தை எனது படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் தாருங்கள் இன்னும் இன்னும் நான் என்னை செதுக்கி்க் கொள்கிறேன் என்று சொல்லும் இவருடன் பேசுவதற்கான எண்:9941226850.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in





Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X