கைலாஷ் யாத்திரை செல்ல ராகுல் திட்டம் 3 மாநில சட்டசபை தேர்தல் காரணமா? Dinamalar
பதிவு செய்த நாள் :
கைலாஷ் யாத்திரை செல்ல ராகுல் திட்டம்
3 மாநில சட்டசபை தேர்தல் காரணமா?

புதுடில்லி:காங்., தலைவர் ராகுல், கைலாஷ் - மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மூன்று மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, தன்னை ஒரு சிவ பக்தனாக காண்பிக்கும் முயற்சியில், ராகுல் ஈடுபட்டுள்ளதாக, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

 கைலாஷ் ,யாத்திரை, செல்ல, ராகுல்,திட்டம்

இந்தியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஹிந்துக்கள், ஆண்டு தோறும், கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

பெயர் பதிவு



இமயமலை பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில், நேபாளம், சீனா ஆகிய அண்டை நாடுகளின் பகுதிகளும் அடங்குவ தால், இந்த யாத்திரையில் பங்கேற்போர், தங்களை பற்றிய விபரங்களை, முன்கூட்டியே அரசிடம் தெரிவித்து, பெயர் பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டுக்கான கைலாஷ் யாத்திரை, அடுத்த மாதம், 8ம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில், காங்., தலைவர் ராகுல், விரைவில் கைலாஷ் யாத்திரை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில சட்ட சபை தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் பயணித்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு, பின், சரியானது.

மூன்று மாநில தேர்தல்



கடும் விபத்தில் சிக்கவிருந்த ராகுல், அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினார்.இதையடுத்து, தன் உயிரை காத்த, கடவுள் சிவனுக்கு நன்றி செலுத்தும் வகை யில், ராகுல், கைலாஷ் யாத்திரை செல்ல திட்ட மிட்டுள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரி வித்து உள்ளன.எனினும், மூன்று மாநில தேர்தல்களை மனதில் வைத்தே, ராகுல், இந்த முயற்சியில் ஈடு பட்டுள்ளதாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராகுலின் பயணம் குறித்து, பா.ஜ.,வினர் கூறிய தாவது:கைலாஷ் யாத்திரை மேற்கொள்ள விரும்பு வோர், முன் கூட்டியே, மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள, கைலாஷ் யாத்ரீகர் பட்டியலில், காங்., தலைவர் ராகுலின் பெயர் இடம் பெற வில்லை. அவ்வாறு இருக்கையில், அவர் எப்படி யாத்திரை மேற்கொள்ள முடியும்?

தேர்தல் வரும்போதெல்லாம், தன்னை ஓர் ஹிந்து வாக அடையாளம் காட்டும் முயற்சியில், ராகுல் ஈடுபடுவது வழக்கமே. குஜராத் சட்டசபை தேர்த லின் போது, ராகுல், பல கோவில்களுக்கு சென்று, வழிபாடு செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார்.கர்நாடக சட்டசபை தேர்தல்

Advertisement

பிரசாரத்தின் போதும், ராகுல் பல கோவில் களுக்கு சென்றார். ஹிந்து மதத்தை சேர்ந்த, மடாதிபதிகளை சந்தித்து, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார்.


தன் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்த படியான புகைப்படத்தை வெளியிட்டார்.கடந்த லோக்சபா தேர்தலில், சிறுபான்மையினரை ஆதரிப்பதாக கூறி, ஹிந்துக்களை கடுமையாக விமர்சித்த காங்கிரசுக்கு, மக்கள் சரியான பாடம் புகட்டினர்.

அந்த தேர்தலில் ஏற்பட்ட சரிவை அடுத்து, தான் ஒரு ஹிந்து, தீவிர சிவ பக்தன் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில், ராகுல் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை மனதில் வைத்தே, ராகுல், கைலாஷ் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவரின் ஏமாற்று வேலையை, மக்கள் நம்பமாட்டார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஆக-201820:03:16 IST Report Abuse

Endrum Indianவெறும் முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் நம்பினால் ஒட்டு வங்கி பெரிதாக இருக்காது என்று இப்போ இந்துக்களையும் சேர்த்துக்கொள்ள இவன் மச்சான் ராபர்ட் வதேரா அந்த கிருத்துவன் திருப்பதியில் போய் மொட்டை அடித்துக்கொண்டது , இப்போ இவரு கைலாய யாத்திரை??? இவனை பின்னாலிருந்து இப்படி செய் அப்படி செய் என்று இயக்குவது யார்???

Rate this:
S. RAGHURAMAN - BENGALURU ,இந்தியா
30-ஆக-201818:48:25 IST Report Abuse

S. RAGHURAMANஏதாவது அறிவுரை வேண்டுமென்றால் எங்க ஊர் இமயமலை specialist இடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Rate this:
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
30-ஆக-201818:14:24 IST Report Abuse

B. இராமச்சந்திரன் கையாலாகாததால் யாத்திரை...

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X