ஸ்டேஷன் வாசலில் தீக்குளித்த பெண் பரிதாப பலி இன்ஸ்., எஸ்.ஐ.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார் கமிஷனர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டேஷன் வாசலில் தீக்குளித்த பெண் பரிதாப பலி இன்ஸ்., எஸ்.ஐ.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார் கமிஷனர்

Added : ஆக 29, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஸ்டேஷன் வாசலில் தீக்குளித்த பெண் பரிதாப பலி இன்ஸ்., எஸ்.ஐ.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார் கமிஷனர்

சென்னை, சென்னை திருவேற்காட்டில், இரு பெண்களுக்கு இடையே நடந்த சாதாரண தகராறு மீது, ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்தி, உயிர் பலி ஏற்பட காரணமாக இருந்த, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., ஆகியோர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.சென்னை, திருவேற்காடு, கோலடி, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர், கஜேந்திரன், 40. இவரது மனைவி ரேணுகா, 33; செவிலியர். இவர்கள் வீட்டின் வெளிப்புறத்தில், கழிப்பறை கட்டும் பணி நடக்கிறது.இதனால், இட பிரச்னை காரணமாக, ரேணுகாவுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த, அமிர்தவல்லி என்பவருக்கும், முன் விரோதம் இருந்துள்ளது. இரு தினங்களுக்கு முன், இருவரும், ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, அமிர்தவல்லி, திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், இன்ஸ்பெக்டர், அலெக்சாண்டரிடம் சிபாரிசு செய்துள்ளனர்.இன்ஸ்பெக்டரும், சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளார். ரேணுகா மற்றும் அவரது கணவர் கஜேந்திரனை, காவல் நிலையத்திற்கு வரவழைத்து, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., சரவணன் ஆகியோர் விசாரித்துள்ளனர்.அவர்கள், அரசியல்வாதிகளின் சிபாரிசு காரணமாக, ஒரு தலைபட்சமாக விசாரித்துள்ளனர். அமிர்தவல்லி மீது எந்த தவறும் இல்லை என, கூறியுள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், ரேணுகா மற்றும் அவரது கணவர் கஜேந்திரனை, காவல் நிலையத்திற்கு வரவழைத்த, இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., மீண்டும், அமிர்தவல்லிக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர்.இதனால், ரேணுகா மனமுடைந்தார். தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். அதை இன்ஸ்பெக்டர் ஏற்க மறுக்கவே, ரேணுகாவிடம், 'சம்பவம் நடந்த இடத்தில், நீ செய்த அடாவடி செயல்கள் எல்லாம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. உன்னை ஆபாச வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்துவிடுவேன்' என, மிரட்டிஉள்ளார்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ரேணுகா, 'காவல் நிலையம் முன் தீக்குளிப்பேன்' என, தெரிவித்துவிட்டு, கணவர் தடுத்தையும் மீறி வெளியே சென்றார்.காவல் நிலையத்தில், அவரது கணவர், கஜேந்திரன் மட்டும், இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., யிடம், 'அடாவடி செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களே' என, மன்றாடி உள்ளார்.இந்நிலையில், மாலை, 3:00 மணிக்கு, திடீரென காவல் நிலையம் எதிரே, பங்கில் வாங்கி வந்த பெட்ரோலால், ரேணுகா, போலீசார் மற்றும் கணவர் கண் முன், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.இதில், 80 சதவீத தீக்காயத்துடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று இரவு 1:45க்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
31-ஆக-201808:06:22 IST Report Abuse
vasanthan கருப்பு பலூன் விட்டவர்கள் எல்லாம் எங்கே காணோம்
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
31-ஆக-201808:05:41 IST Report Abuse
vasanthan கேரளாவில் கற்பழிப்புக்கும் காத்திருப்பு தண்டனை தான் தமிழ்நாட்டில் கொலைக்கும் காத்திருப்பு தான் தண்டனை. கழகமும் கம்யூனிஸ்ட்களும் ஆளும் இடத்தில வேறு என்ன எதிர் பார்க்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel
Swamidoss - Florida,யூ.எஸ்.ஏ
30-ஆக-201818:09:29 IST Report Abuse
Swamidoss Punish the police officers, supported politicians and the lady.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X