கல்விதான் மனிதனை முழுமையாக்கும் சிலை திறப்பு விழாவில் கவர்னர் பேச்சு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கல்விதான் மனிதனை முழுமையாக்கும்
சிலை திறப்பு விழாவில் கவர்னர் பேச்சு

கோபி, ''கல்விதான் மனிதனை முழுமையாக் கும்,'' என, கோபியில் நடந்த, லட்சுமண ஐயர் சிலை திறப்பு விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

கல்விதான், மனிதனை,முழுமையாக்கும்,சிலை திறப்பு ,விழாவில் கவர்னர், பேச்சு


ஈரோடு மாவட்டம், கோபி அருகே, டி.எஸ். ராமன் மற்றும் சரோஜினிதேவி விடுதி வளாகத் தில், விடுதலை போராட்ட வீரர் லட்சுமண ஐயர் சிலை திறப்பு விழா நடந்தது.சிலையை திறந்து, கவர்னர் புரோஹித் பேசியதாவது:

கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன்பே, மனித மலத்தை மனிதர்களே கையால் அகற்றுவதை,

லட்சுமண ஐயர் தடை செய்தார்.அவர், கோபி நகராட்சி தலைவராக இருந்த போது, இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்.இப்போது தான், நாம் அதை தடை செய்துஉள்ளோம். தன், 650 ஏக்கர் பட்டா நிலத்தை மக்களுக்கு வழங்கினார். அவரும் அவரது தந்தையும், மிகச்சிறந்த சுதந்திரபோராட்ட வீரர்கள்.

கடந்த, 1928ல் சமபந்தி போஜனத்தை, தீண்டா மைக்கு எதிராக, காந்தியடிகள் உருவாக்கினார். லட்சுமண ஐயரின் உயர் ஜாதி குடும்பம், தீண்டா மைக்கு எதிராக போராடியது.மனைவி லட்சுமி யுடன், சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட அவர், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில், 650 பேருக்கு சமைத்துப் போடும் பணி, அவருக்கு தண்டனையாக வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி, சிறை கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை, தானாகமுன்வந்து ஏற்றார்.

கடந்த, 1942ல் காந்தியடிகளை சந்தித்தார். அதன் பின், காந்தியின் சமுக சீர்திருத்தம், தீண்டாமைக்கு எதிரான முழக்கங்கள் அவரை ஈர்த்தன.பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். பள்ளிக்

Advertisement

கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கல்வி ஒன்றுதான் மனிதனை முழுமையாக்கும்.எனவே, கல்விக்கு நாம் அதிக முக்கியத் துவம் தர வேண்டும்.


கல்வியால்சமூகத்தில், மறுமலர்ச்சி உருவாக்க வேண்டும். மனித சமுதாயத்துக்கு,நாம் உதவி செய்ய,கல்விதான் பெருமளவில் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உட்பட பலர் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-201823:06:45 IST Report Abuse

a.thirumalaiமனிதாபிமானம் ஒழுக்கம் இல்லாததால் இன்றைய கல்வியின் நிலை எவ்வாறு இருக்கிறது? எதிர் காலத்தில் எப்படி இருக்கும்?

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
30-ஆக-201816:45:20 IST Report Abuse

N.Kaliraj எல்லாம் சரிதான் ஆனா எங்கோ ஒன்னு மட்டும் இடிக்குது.....அது என் மரமண்டைக்கு புரியமாட்டங்குது....

Rate this:
gilji - tanjore,இந்தியா
30-ஆக-201813:02:23 IST Report Abuse

giljiஒழுக்கத்துடன் கூடிய கல்வி மட்டுமே மனிதனை முழுமையாக்கும் ........

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X