கும்பல் தாக்குதலை தடுக்க புதிய சட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கும்பல் தாக்குதலை தடுக்க புதிய சட்டம்

Added : ஆக 30, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கும்பல் தாக்குதல்,தடுக்க,புதிய சட்டம்

புதுடில்லி : மாடு கடத்தல், குழந்தை கடத்தல், திருட்டு என, பல்வேறு காரணங்கள் மற்றும் வதந்திகளால், தனிநபர் அடித்துக் கொல்லப்படும் சம்பவத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

மாடு கடத்தல், குழந்தை கடத்தல், திருட்டு என, பல்வேறு வதந்திகள் காரணமாக கும்பல்களால் தனிநபர்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 40 பேர் இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டனர். 'மக்களே சட்டத்தை கையில் எடுத்து, இதுபோல் கும்பல் தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு தகவல்கள் பெறுவதற்காக, போலீஸ், எஸ்.பி., தலைமையிலான குழுவை, ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிடையே கும்பல் தாக்குதலை தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றுவது குறித்தும் அதன் அம்சங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய உள்துறை செயலர், ராஜிவ் கவுபா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பல்வேறு தரப்பினருடன் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில், தன் பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு, இந்த பரிந்துரைகள் குறித்து ஆராய உள்ளது. இந்தக் குழுவில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூக நீதித் துறை அமைச்சர் தன்வார் சந்த் கெலாட் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
30-ஆக-201810:08:48 IST Report Abuse
hasan பசுக்குண்டர்களால் தான் ஏராளமான உயிரிழப்பு , அவர்களை கட்டுப்படுத்த இந்த அரசு தயாராக இல்லை , பிறகு சட்டம் இயற்றி என்ன பயன்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
30-ஆக-201807:57:26 IST Report Abuse
Srinivasan Kannaiya கும்பல் தாக்குதலை தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றுவது குறித்தும் அதன் அம்சங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய உள்துறை செயலர், ராஜிவ் கவுபா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது..இந்த கும்பல் தாக்கல் லஞ்சலாவண்யத்திற்கு மட்டும் அனுமதிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
30-ஆக-201807:15:57 IST Report Abuse
Kuppuswamykesavan ////.... forward செய்வதில் நம் மக்கள் நிபுணர்கள்... சொந்தமாக எதையும் ஆராய்ந்து பார்த்து எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிக்கவே முடியாத அளவில் அறிவுள்ளவர்கள் ஏராளம்...//// - இந்த வாசகரின் அபிப்ராயம் சூப்பருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X