முன்பே கைதாகி பல ஆண்டு சிறையில் இருந்த நக்சல் | Dinamalar

முன்பே கைதாகி பல ஆண்டு சிறையில் இருந்த நக்சல்

Updated : ஆக 30, 2018 | Added : ஆக 30, 2018 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
நக்சல், மாவோயிஸ்ட், மன்மோகன் சிங் அரசு, புனே போலீஸ், வர வர ராவ், பீமா கோரேகான்,  எதிர்க்கட்சிகள், சுப்ரீம் கோர்ட் ,வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், கவுதம் ரவாலகா , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,
Naxalite, Maoist, Manmohan Singh government, Pune Police, Varavara Rao, Bima Karekan, Opposition, Supreme Court, Vernon Consulves, Arun Pereira, Sudha Bharadwaj, Gautam Ravalaka, Communist Party of India,


புதுடில்லி: சில நாட்களுக்கு முன், புனோ போலீசாரால் கைது செய்யப்பட்ட நக்சல் ஆதரவாளர்கள் பற்றி 2012ம் ஆண்டே அப்போதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எச்சரிக்கை செய்து, மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியது தற்போது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நகரங்களில் நக்சல் கருத்துகளை பரப்பும் பணியில் ஈடுப்பட்ட அவர்களது ஆதரவாளர்களை புனே போலீசார் கைது செய்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அரசால் கண்காணிக்கப்பட்ட அமைப்புகளுடன் தற்போது கைதானவர்களுக்கு தொடர்பு உள்ளதும், அவர்கள் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.


2017 ல் கலவரம்:

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிச., 31ம் தேதி இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய புனே போலீசார், ஜூன் மாதம் 6 பேரை கைது செய்தனர். இந்த கலவரத்திற்கு நிதியுதவி செய்தது நக்சல்கள் தான் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆக., 28ம் தேதி வர வர ராவ், வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், கவுதம் ரவாலகா ஆகிய ஐந்து பேரை செய்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கைதானவர்களை வீட்டு காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


மன்மோகன் அரசு கடிதம்

இந்த சூழ்நிலையில், புதிய தகவல் வெளியாகி உள்ளது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்த போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு 2012ம் ஆண்டு டிசம்பரில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியது.அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) நெருங்கிய தொடர்பு வைத்துள்ள 128 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இப்படி மன்மோகன் சிங் அரசால் கண்காணிக்கப்பட்ட அமைப்புகளுடன் தற்போது கைதான வர வர ராவ், வெர்னான், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ் மற்றும் கடந்த ஜூன் மாதம் கைதான சுரேந்திரா காட்லிங்க், ரோனா வில்சன், மகேஷ் ரவத் ஆகிய ஏழு பேருக்கும் தொடர்பு உள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்பே கைது

:இவர்களில் பெரைராவும், வெர்னாசும் 2007ல் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். அதே போல வரவரராவ் பலமுறை ஆந்திரா மற்றும் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டார் என்றும் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.


6956 அப்பாவிகள் பலி்:

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛2001 முதல் 6956 பொதுமக்கள், 2517 பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். அரசு கட்டடங்கள், வளர்ச்சிப் பணிகளையும் சேதப்படுத்தி உள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
30-ஆக-201821:24:01 IST Report Abuse
r.sundaram காங்கிரஸ் தான் ஆண்டபோது நாட்டை நாசமாக்கியது போதாது என்று தற்போதும் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நல்ல நடவடிக்கைகளையும் எதிர்க்கிறது. இது நல்லதிற்கு இல்லை. இவ்வாறு அரசியல் செய்தால் அந்த கட்சிக்கு சீக்கிரமே அழிவு நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
Rao -  ( Posted via: Dinamalar Android App )
30-ஆக-201821:15:44 IST Report Abuse
Rao Let them prove there innocence in the court of law and get released.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
30-ஆக-201819:56:27 IST Report Abuse
அம்பி ஐயர் எத்தனை அப்பாவிகள் பலியானால் தான் என்ன.... அதைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை..... தீவிரவாதிகள் மீதுதான் அவர்களுக்கு அன்பும் பாசமும் கவலையும் பொங்கி வரும்.... அவர்களுக்காக வக்காலத்து வாங்குபவர்கள்..... ஆதரிப்பவர்கள்... போராடுபவர்கள்.... என அனைவருமே குற்றவாளிகள்.... தேசத் துரோகிகள்.....
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
30-ஆக-201820:34:16 IST Report Abuse
Rayநாலு வருஷமா இல்லாமே இப்போ திடீர்னு இந்த பிரச்சினையை கையில் எடுத்தது ஏனோ நிலைமை கட்டுக் கடங்காமல் போகும்போதெல்லாம் மக்கள் கவனத்தை திசை திருப்ப இதுபோல பல "நாடகங்கள்" அரங்கேறியுள்ளன ஒரு ஓட்டையை அடைக்க மற்றொன்றை காட்டுவது வாடிக்கையாகி விட்டது பண மதிப்பு வீழ்ச்சி அதல பாதாளம் பெட்ரோல் விலை நூறை தொட்டு விடும் எனவே இந்த திசை திருப்பலா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X