பல்லிளித்து போன இம்ரான் எளிமை| Dinamalar

பல்லிளித்து போன இம்ரான் எளிமை

Added : ஆக 30, 2018 | கருத்துகள் (71)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாகிஸ்தான், பிரதமர், இம்ரான் கான், எளிமை, ஹெலிகாப்டர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான், எளிமையான வாழ்க்கையை பின்பற்ற போவதாக கூறினார். ஆனால், வீட்டில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் அவர் ஹெலிகாப்டரில் சென்று வருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.


அடுத்தடுத்த 'எளிமை' உத்தரவுகள்

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. அவரது தலைமையில் கூட்டணி ஆட்சியும் அமைந்தது. பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், ' ஏராளமான அறைகள் கொண்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் வேண்டாம்; இரண்டு வேலைக்காரர்கள் மட்டும் போதும்; இரண்டு புல்லட் புரூப் கார்கள் இருந்தால் போதும்; அமைச்சர்கள், அதிகாரிகள் விமான பயணத்தின் போது, கூடுதல் கட்டணத்தில் பயணிக்க கூடாது' உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்தார். அவரது எளிமையை பல நாட்டினரும் பாராட்டினர். சில நாட்களிலேயே அவரது எளிமை பல்லிளித்து விட்டது. இது குறித்து பி.பி.சி., உருது சேனல் வெளியிட்டுள்ள செய்தி:



அமைச்சரின் சூப்பர் விளக்கம்

இம்ரான்கானின் வீடு, இஸ்லாமாபாத்தில் பானி காலா என்ற இடத்தில் உள்ளது. தலைமை செயலகத்தில் அவரது பிரதமர் அலுவலகம் உள்ளது. இரண்டுக்கும் இடையே தூரம் 15 கி.மீ., தான். ஆனால், வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்ல அவர் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.

இதை சமூக வலை தளங்களில் பலரும் கடுமையான விமர்சனம் செய்கின்றனர். பாக்., தகவல் துறை அமைச்சர் பாவாத் சவுத்ரி இது குறித்து கூறுகையில், ' இம்ரான் கான் செயல்பாடு சரியானது தான். ஹெலிகாப்டரில் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்ய, ரூ.50 முதல் ரூ.55 வரை தான் செலவாகும்' என்றார்.


ஆனால், உண்மையான செலவு மிக அதிகம். வீடு மற்றும் அலுவலகத்திற்கு இடையேயான தூரம் 15 கி.மீட்டர். விமான போக்குவரத்தை பொறுத்தவரை இதை 8 நாட்டிகல் மைல் என்று கூறுவர். ஹெலிகாப்டரில் ஒரு நாட்டிகல் மைல் தூரம் செல்ல ரூ.16 ஆயிரம் செலவாகும். 8 நாட்டிகல் மைல் தூரம் செல்ல ரூ.1.28 லட்சம் செலவாகும். அவர் காரில் அலுவலகத்திற்கு சென்றால் குறைந்த செலவு தான் ஆகும்.


இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-செப்-201810:03:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சட்டை பத்து லட்சம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
01-செப்-201814:14:46 IST Report Abuse
Kailash ஹெலிகாப்டரில் செல்லுவது நல்ல விஷயம் தான்... மக்களை காப்பாற்ற தான்... பெனாசிர் பூட்டோ சாலையில் சென்றார் வெடிகுண்டு வெடித்து மக்கள் பல பேர் பலியானார்கள் தீவிரவாத நாடான பாகிஸ்தானில் இவர் சாலையில் செல்லுவது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை ஹெலிகாப்டரில் சென்றால் தீவிரவாதிகளுக்கு லாஞ்சர் போதும் ஹெலிகாப்டர் உள்ளே உள்ளவர்கள் மட்டும் பலியாவார்கள்... ஆனால் அவர்கள் மக்கள் செல்லும் சாலை மேலே பயணிக்காமல் பாலைவனம் காடு மலை என்று சுற்றி பயணித்தால் அப்பாவி மக்களுக்கு நல்லது...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-201803:27:12 IST Report Abuse
Mani . V இந்தியாவில் ஒருவர், "டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, தரமான இந்தியா, ..........." என்று பொய்களாய் சொல்லி நான்கு வருடத்துக்கு முன்பு பதவிக்கு வந்து விட்டு, இன்று வரையில் எந்த ஒன்றும் செய்யாமல் எதிர்க்கட்சிகளின் மீது பழியை போட்டுக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் (பெட்ரோல், டீசல், காஸ்,.......) விலைகளை மட்டும் பல மடங்கு ஏற்றி விட்டு ஒன்றுமே தெரியாதது போன்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவரின் மீது பட்டு சென்ற காற்று இம்ரான் கான் மீது பட்டு இருக்குமோ, என்னமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X